ஆம்புலன்ஸ்க்கு வழி விடவில்லை என்றால் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

நாட்டின் 18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் ஆலோசனையும் பரிந்துரைகளின் அடிப்படையிலுமே இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்க்கு வழி விடவில்லை என்றால் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 27, 2019, 11:53 AM IST
  • Share this:
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான புதிய மோட்டார் வாகன மசோதா நீண்ட நாளாக மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன் அடிப்படையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது, ஆபத்தான பயணம், குடிபோதையில் பயணம், அதிவேகம், அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லுதல் ஆகிய போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை ஊர்திகளுக்கு வழிவிடாத வாகனஓட்டிகளுக்கு 10ஆயிரம் அபராதம் விதிக்க இந்த மசோதா ஒப்புதல் அளித்துள்ளது.


இதேபோல், லைசென்ஸ் விதிமுறைகளை மீறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.

நாட்டின் 18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி!
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்