• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மகாராஷ்டிராவில் இனி LLR மற்றும் புதிய வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனிலேயே பெறலாம்.!

மகாராஷ்டிராவில் இனி LLR மற்றும் புதிய வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனிலேயே பெறலாம்.!

LLR மாதிரி படம்

LLR மாதிரி படம்

online learners’ licence முறையை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளதால், அம்மாநிலத்தில் இனி LLR பெற விரும்புவோர் தங்களது பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்.டி.ஓ) செல்ல வேண்டியதில்லை.

  • Share this:
மகாராஷ்டிராவில் LLR பெற விரும்பும் மக்கள் இனி ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டத்தில் நின்று அலைமோதுவது என்பது இனி கட்டாயமாக இருக்காது. ஏனென்றால் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை சமீபத்தில் learner’s driving licence எனப்படும் LLR-ஐ ஆன்லைன் மூலம் பெற்று கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு முன் வழங்கப்படும் பழகுநர் உரிமமான LLR  பெற்று 30 நாட்களுக்கு பின்னரே டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கும்.

எனவே LLR-ஐ பெற அதிக அளவிலான மக்கள் ஆர்டிஓ அலுவலகங்களை நாட வேண்டிய சூழல் இருக்கிறது. அங்கு நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் online learners’ licence முறையை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளதால், அம்மாநிலத்தில் இனி LLR பெற விரும்புவோர் தங்களது பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்.டி.ஓ) செல்ல வேண்டியதில்லை.

வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இன்டர்நெட்டை பயன்படுத்தி இப்போது ஆன்லைனிலேயே LLR-க்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பம் சார்ந்த மற்றொரு முயற்சியாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆதார் அடிப்படையில் முதல் ஆன்லைன் LLR `லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார்.

Also Read:   தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மக்கள் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின்   சாரதி 4.0 வெப்சைட்டிற்கு (Sarathi 4.0 website) சென்று முன்பைப் போலவே பெயரளவு கட்டணத்தை செலுத்துவதன் மூலம் ஆன்லைன் driver learner’s licence-ற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி LLR-ஐ ஆன்லைனில் விண்ணப்பித்து டெஸ்ட் எழுதிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அம்மாநில போக்குவரத்து உயரதிகாரி ஒருவர், சாலை பாதுகாப்பு வீடியோக்களுடன் ஒரு பாடநெறி தொகுதியின் அடிப்படையில் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த டெஸ்டை வெற்றிகரமாக அவர்கள் முடித்த பின், அவர்களின் கணினிகள் அல்லது ஸ்மார்ட் போன்களில் அவர்களுக்கு தேவையான LLR உரிமம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Also Read:   புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பராப் கூறுகையில், உண்மையில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். சராசரியாக, ஆண்டுதோறும் 20 லட்சம் புதிய வாகனங்களை பதிவு செய்வதோடு, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பழகுநர் ஓட்டுநர் உரிமங்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த பணி மிகவும் மன அழுத்தத்தை தருவது மட்டுமல்லாமல், ரூ.100 கோடிக்கு மேல் செலவாகிறது. சுமார் 200 அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிரமம் இப்போது மாநில அரசின் ஆன்லைன் மூலம் LLR வழங்கும் திட்டம் மற்றும் புதிய வாகனங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம் உள்ளிட்டவை மூலம் முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே நேரம் மற்றும் பணம், ஆற்றல் இவற்றை மிச்சப்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னுரிமை அளித்து வருகிறார். வேகமான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குவதைத் தவிர, பாதுகாப்பான போக்குவரத்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தாக்கரே கூறி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: