Home /News /automobile /

உங்கள் கார் நீண்ட நாட்களுக்கு ஓடாமல் நிற்கிறதா? - பராமரிப்பதற்கான டிப்ஸ் இதோ!

உங்கள் கார் நீண்ட நாட்களுக்கு ஓடாமல் நிற்கிறதா? - பராமரிப்பதற்கான டிப்ஸ் இதோ!

வாகன பராமரிப்பு

வாகன பராமரிப்பு

Car Care : உங்கள் வாகன பராமரிப்புக்கு தேவையான டிப்ஸ் குறித்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலம் ஆரம்பித்ததில் இருந்து நமது வாழ்க்கை சூழலை புரட்டி போட்டுவிட்டது. நமது பாதுகாப்பு காரணமாகவும், லாக்டவுன் காரணமாவும் நாம் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்டு விட்டோம். எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பழக்கம் நம்மில் ஊடுருவியுள்ளது.

பெரும்பாலும் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடந்ததால், சந்தேகமே இல்லாமல் நமது உடல் சோம்பேறி ஆகிவிட்டது. ஆனால், இந்த லாக்டவுன் காலத்தில் உங்களுக்கு சொந்தமான மற்றொரு பொருள் வீணாகி கொண்டிருப்பது குறித்து நீங்கள் சிந்தித்து பார்த்தது உண்டா?

ஆம், உங்கள் காருக்கு தான் இப்போது பராமரிப்பு தேவைப்படுகிறது. நீண்ட நாட்களாக ஓடாமல் ஒரே இடத்தில் நிற்கும் காரை நீங்கள் முறையாக பராமரித்தால் மட்டுமே அதன் செயல்திறனை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மீண்டும் ஒரு பெரிய கொரோனா அலை எந்த சமயத்திலும் வரலாம் என்ற சூழலில், நீங்கள் மீண்டும் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்படலாம். அத்தகைய சூழலில், உங்கள் வாகன பராமரிப்புக்கு தேவையான டிப்ஸ் குறித்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

வெளிப்புற பாதுகாப்பு :

நீண்ட காலம் வெயில், மழை அல்லது ஒரே கால சூழலில் நிற்பதால் உங்கள் வாகனத்தின் வெளித்தோற்றம் பாதிப்பு அடையக் கூடும். வெயில் மற்றும் பறவைகளின் எச்சங்களில் இருந்து வாகனத்தை பாதுகாக்க அதன் மீது உறை போடுவது அவசியம். கொட்டகை அல்லது தெருவில் என எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் இதை நீங்கள் செய்ய வேண்டும். உறை போடுவதால் கிராக் மற்றும் பெயிண்ட் பேடிங் போன்றவற்றை தடுக்கலாம்.

பேட்டரி பாதுகாப்பு :



உங்கள் கார் ஓடவில்லை என்றாலும் கூட, பேட்டரி எப்போதும் சார்ஜ் இறங்கிக் கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, வாரத்தில் ஒரு முறையாவது காரை ஸ்டார்ட் செய்து 10, 15 நிமிடங்கள் ஓட விடவும். அதே சமயம், ஒரு மாதத்துக்கு கார் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பேட்டரி இணைப்பை துண்டிப்பது நல்ல நடவடிக்கை ஆகும்/

ஹேண்ட் பிரேக் பதிலாக கியர் பயன்படுத்தவும் :



பொதுவாக, வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது ஹேண்ட் பிரேக் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், நீண்ட காலத்துக்கு இதுபோல நிறுத்தப்பட்டிருந்தால் மெக்கானிக்கல் ரீதியாக சிக்கல் ஏற்படும். ஆகவே, காரை கியரில் வைத்து நிப்பாட்டலாம். குறிப்பாக, ரிவர்ஸ் கியர் பயன்படுத்தலாம்.

அருகில் உள்ள இடத்துக்கு பயணம் :

ஹெட்லைட், ஏசி போன்றவை முறையாக செயல்பட வேண்டுமென்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வண்டியை இயக்குவது கட்டாயம் ஆகும். ஆகவே, அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்கலாம்

எலி தொல்லை :



வீட்டு சமையல் அறையில் மட்டுமல்ல. கார்களிலும் எலி தொல்லை உண்டு. அவை எலெக்ட்ரிக் வயர்கள், சீட் போன்றவற்றை கடித்து வைத்துவிடும். ஆகவே, இதுகுறித்து அவ்வபோது பரிசோதிக்க வேண்டும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car, Car travel

அடுத்த செய்தி