ஆட்டோமொபைல் துறையில் வேலை பறிபோகும் அபாயம் இல்லை- மத்திய இணை அமைச்சர் உறுதி!

கடந்த மூன்று ஆண்டுகள் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை எதுவும் மூடப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் வேலை பறிபோகும் அபாயம் இல்லை- மத்திய இணை அமைச்சர் உறுதி!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 9, 2019, 8:07 PM IST
  • Share this:
ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றி வருவோருக்கு வேலை பறிபோகும் அபாயம் இல்லை என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

இன்றைய மாநிலங்களவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பங்கேற்று பதிலளித்தார் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். அவர் கூறுகையில், “இந்திய ஆட்டோமொபைல் துறை ஒரு வளர்ச்சிப் பாதையில் உள்ளது. BS IV முதல் BS VI-க்கான மாற்றம் ஏற்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2020 முதல் BS VI அமலாகிவிடும். மின்சார வாகனமயமாக்கல் நோக்கியும் நகர்ந்து வருகிறோம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இது ஒரு மாற்றத்துக்கான நேரமே. இதில் வேலை பறிபோக வாய்ப்பில்லை. இது தொடர்பாக கவலைப்படவும் வேண்டாம். காலகட்டத்துக்கு தகுந்தாற்போல் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார் இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால்.


கடந்த மூன்று ஆண்டுகள் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை எதுவும் மூடப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பார்க்க: பென்ஸ் காருக்குப் போட்டியாக களம் இறங்கும் கியாவின் Carnival MPV...!
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading