எலெக்ட்ரிக் வாகன வரவேற்பால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடை வராது! - நிதின் கட்காரி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் பேருந்துகள், பயோ எத்தனால் மூலம் செயல்படும் பேருந்துகளே அதிகம் இருக்கும்.

எலெக்ட்ரிக் வாகன வரவேற்பால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடை வராது! - நிதின் கட்காரி
நிதின் கட்காரி
  • News18
  • Last Updated: September 25, 2019, 12:47 PM IST
  • Share this:
’இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கியத்துவம் அதிகப்படியாக வழங்குவதால் அரசு பெட்ரோல், டீசல் ரக வாகனங்களை நீக்க வேண்டியதில்லை. அதற்கான அவசியம் ஏற்படாது’ என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அரசின் முக்கியத்துவம் என்பது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான முற்றுப்புள்ளியாகவே கருதப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகும் என்று நிதி ஆயோக் அறிவித்திருந்தது மேலும் குழப்பங்களை அதிகரித்தது.

ஆனால், மின்சார வாகனங்களால் பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தித் துறைக்கு வீழ்ச்சி ஏற்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்திருந்தார்.


அதாவது, 2025-ம் ஆண்டுக்குப் பின்னர் 150cc திறன் கொண்ட இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாக வேண்டும் என்கிறது அரசு. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியதற்கான அவசியமே இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் பேருந்துகள், பயோ எத்தனால் மூலம் செயல்படும் பேருந்துகளே அதிகம் இருக்கும்.

இதன் மூலம் பணச்செலவும் மிச்சம் ஆகும். ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாய் என்று கூறினால் எவ்வளவும் லாபகரமானதாகக் கேட்கிறது. இதுபோலத்தான் எலெக்ட்ரிக் வாகன செலவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். விவசாயத்தின் மூலமும் இயற்கை எரிவாயு உபயோகத்தை அதிகரிக்கலாம். எலெக்ட்ரிக் வாகன உபயோகத்தை அதிகரிக்க உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் KfW (ஜெர்மானிய நிறுவனம்) உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்” என்றார்.

மேலும் பார்க்க: ₹600-ல் இருந்து ₹15 ஆயிரமாக உயரும் வாகனப் பதிவுக் கட்டணம்- வருகிறது புதிய சட்டம்!ஓசூரில் 80 சதவிகித உற்பத்தியை நிறுத்திய சிறுகுறு நிறுவனங்கள்!
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading