ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நோ ஹேண்ட் பிரேக்…. பிரேக்ஸ் இந்தியாவின் அசத்தல் கண்டுபிடிப்பு

நோ ஹேண்ட் பிரேக்…. பிரேக்ஸ் இந்தியாவின் அசத்தல் கண்டுபிடிப்பு

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

கார்களின் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றான ஹேண்ட் பிரேக்கை லிவர் இல்லாமல் அசத்தலாக வடிவமைத்துள்ளது பிரேக்ஸ் இந்தியா நிறுவனம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காரை நிறுத்தி வைக்கும் போது காரின் பாதுகாப்பிற்கு முதல் காரணம் அதில் இருக்கும் ஹேண்ட் பிரேக் தான். காரை ஓட்டுபவர் எளிதாக இயக்கும் வகையில் காரின் முன்புறத்தில், டிரைவர் இருக்கைக்கு அருகில் ஹேண்ட் பிரேக்கிற்கான லிவர் இருக்கும். இப்போது பல்வேறு நவீன வசதிகள் கார்களில் பொருத்தப்படுவதால் ஹேண்ட் பிரேக்கிற்கான லிவர் வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதைப் போக்கும் விதமாகத்தான் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இருக்கிறது.

இப்படியாக பார்க்கிங் பிரேக் காருக்கு முக்கியமானது என்பதால் அது சிறிய கார்களில் இடத்தை அடைத்தாலும் வேறு வழியில்லாமல் வைக்க வேண்டிய நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு தீர்வு ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இந்த தயாரிப்பு இனி வருங்காலத்தில் பார்க்கிங் பிரேக்கே இல்லாத அளவிற்கு கார்களை மாற்றும்.

சென்னையை சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பிரேக்குகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இவர்கள் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தங்களது புதிய மற்றும் வித்தியாசமான தயாரிப்பு ஒன்றைக் காட்சிப்படுத்தியுள்ளனர். அது இனி கார்களில் பார்க்கிங் பிரேக்களுக்கு மாற்றாகச் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டிரம் பிரேக் கொண்ட கார்களில் டிரம் பிரேக்கில் புதியதாக மோட்டார் ஒன்றைப் பொருத்தி இதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த பிரேக் கார்களில் பொருத்தப்பட்டால் கார்களில் பார்க்கிங் லிவரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இந்த தயாரிப்பை இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தும்படி சத்தம் இல்லாமல் செயல்படும்படியும் வடிவமைத்துள்ளனர்.

இது வாகனங்களுக்கான ஹில் ஹோல்டு பிரேக்காவும் செயல்படும். பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரேக்கை முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைத்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த டிரம் பிரேக்கில் மோட்டாரை பொருத்தும் தொழில் நுட்பத்தில் புரோட்டோ டைப்பிலிருந்து டெஸ்டிங், டெவலப்பிங் மற்றும் தயாரிப்பு என அனைத்தும் இந்தியாவிலேயே நடக்கும்படி திட்டமிட்டுள்ளது. இதனால் இது முற்றிலுமாக இந்திய தொழில் நுட்பம் என்று கூடச் சொல்லலாம். இந்த தொழில் நுட்பம் சிறிய ரக கார்கள், குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தச் சிறந்த சாதனம் எனக் கூறப்படுகிறது.

இந்த பிரேக் பொருத்தப்பட்டால் எதிர்காலத்தில் கார்களில் இந்த ஹேண்ட் பிரேக் லிவரே காணாமல் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இனி வரப்போகும் கார்களில் புதிய நவீன ஹேண்ட் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்படும்.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Automobile, Business, Car