ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

’எரிபொருளில் மாற்றம்.. பூமிக்கும் நல்லது’ - அசத்தல் காரை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்!

’எரிபொருளில் மாற்றம்.. பூமிக்கும் நல்லது’ - அசத்தல் காரை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்!

டொயோட்டா

டொயோட்டா

Toyota Corolla Altis Flex-Fuel Car | ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் எஞ்சின் கொண்ட இந்தியாவின் முதல் காராக இது அறிமுகப்படுத்ப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்ட டொயோட்டா மோட்டாரின் கொரோலா ஆல்டிஸ் செடான் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜப்பானிய கார் தயாரிப்பாளரான டொயோட்டாவின் கொரோலா ஆல்டிஸ் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் காரை (Toyota Corolla Altis Flex-fuel car), சமீபத்தில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் எஞ்சின் கொண்ட இந்தியாவின் முதல் காராக இது அறிமுகப்படுத்ப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்ட டொயோட்டா மோட்டாரின் கொரோலா ஆல்டிஸ் செடான் ஆகும். டொயோட்டாவின் முதல் வகையான பைலட் திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தது, 100% எத்தனாலில் இயங்க கூடிய ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்-ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனத்தில் (FFV-SHEV) என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று எரிபொருளுக்கான சோதனையின் ஒரு பகுதியாக ஜப்பானிய ஆட்டோ நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

ஒரே ஒரு வகை எரிபொருளில் இயங்குவதற்குப் பதிலாக, ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனம் பெட்ரோல் மற்றும் 83 சதவீதம் வரை எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும். டொயோட்டா மோட்டார் தவிர டி.வி.எஸ், பஜாஜ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் எத்தனால் ரெடி வாகனங்களுடன் தயாராக இருக்கின்றன. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் டொயோட்டா நிறுவனம் தனது முன்னோடி திட்டத்திற்காக பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் FFV-SHEV-வை பயன்படுத்தியது.

இந்த முன்னோடித் திட்டம் இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் நோக்கம் கொண்டது. இத்திட்டம் எத்தனாலால் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் வாகனங்களில், மாசுபாட்டைக் குறைக்கும், அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க எலெக்ட்ரிக்-ஹைப்ரிட் வாகனங்களில் எத்தனாலை பயன்பாட்டை செயல்படுத்துகிறது. மாசு மற்றும் விலை ஏறி கொண்டே போவதால் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வாகனங்களுக்கு மாற்று எரிபொருளை பயன்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் டொயோட்டா இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சுற்றுசூழல் மாசுபாடு ஒரு பெரிய கவலையாக இருப்பதாகவும் குறிப்பாகபோக்குவரத்துத் துறைக்கு மாசுபாட்டில் பெரிய பங்கு இருப்பதாகவும் கூறினார். எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள், எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற பயோஃப்யூயல்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார். பிரேசிலில் டொயோட்டா பிரேசிலால் ஃப்ளெக்ஸ் ஃப்யூல்-ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FFV SHEV ஆனது ஒரு ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் எஞ்சின் மற்றும் ஒரு எலெக்ட்ரிக்பவர்டிரெய்னை கொண்டுள்ளது, இதனால் அதிக எத்தனால் பயன்பாடு மற்றும் அதிக எரிபொருள் திறன் ஆகியவற்றின் இரட்டைப் பலன்களை வழங்குவதாக கூறுகிறது டொயோட்டா.

இதனிடையே நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பிரேசில் இறக்குமதி flex-fuel sedan வாகனமானது, 1.8 லிட்டர் எத்தனால் ரெடி பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 101bhp ஆற்றலையும், 142Nm டார்க் செயல்திறனையும் உருவாக்கும் போது, இது 20-100% வரையிலான எத்தனால் கன்டன்ட் ஃப்யூயலில் இயங்குகிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் 1.3 kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 72 bhp பவர் மற்றும் 163 Nm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த பவர்டிரெய்ன் கலவை CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃப்ளெக்ஸ்-ஃப்யூயலுக்கு இணக்கமான கார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை எரிபொருளிலும் கலவையிலும் இயங்க முடியும். பொதுவாக, பெட்ரோல் மற்றும் எத்தனால் அல்லது மெத்தனால் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் உலகளவில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மாற்று எரிபொருளாகும் மற்றும் பிரேசில் அதிகப்பட்ச சராசரியான 48% கலவையை கொண்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: India, Nitin Gadkari, Tamil News, Toyota