பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய திட்டமா? விளக்கும் நிதின் கட்காரி

'இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் பங்களிப்பை அரசு உணர்ந்து உள்ளது'.

பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய திட்டமா? விளக்கும் நிதின் கட்காரி
நிதின் கட்காரி
  • News18
  • Last Updated: September 5, 2019, 2:49 PM IST
  • Share this:
பெட்ரோல், டீசல் ரக வாகனங்களையே முற்றிலுமாக தடை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஒருநாளும் அரசுக்கு இருந்ததில்லை என விளக்கமளித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சமூக மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், ”நாட்டில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களை முற்றிலுமாக தடை செய்துவிட வேண்டும் என அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை. 4.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆட்டோமொபைல் துறை பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தற்போதைய சூழலில் அரசு சில பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதில் முதல் பிரச்னையாக கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளது. இரண்டாவது பிரச்னையாக மாசுபாடும் மூன்றாவதாக சாலை பாதுகாப்பும் உள்ளன. பெரும் மதிப்புள்ள இத்துறை மாசுபாடற்றதாகவும் மாற வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் பங்களிப்பை அரசு உணர்ந்துள்ளது.


முதலில் மாசுபாடைக் குறைப்பது முக்கியப் பணியாக உள்ளது. இதற்காக 50ஆயிரம் கோடி ரூபாய் திட்டமும் தயாராகி உள்ளது” என்றார்.

மேலும் பார்க்க: ஒரே மாதத்தில் 6,200 கார்கள்... விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!

திருப்பூரில் மூடப்படும் பின்னலாடை நிறுவனங்கள்
First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்