தரமான இ-வாகனங்கள் வேண்டும் - உற்பத்தியாளர்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்!

எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

Web Desk | news18
Updated: December 23, 2018, 5:16 PM IST
தரமான இ-வாகனங்கள் வேண்டும் - உற்பத்தியாளர்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்!
நிதின் கட்காரி
Web Desk | news18
Updated: December 23, 2018, 5:16 PM IST
‘தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும்’ என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'எலெக்ட்ரிக் வாகனங்கள் கண்காட்சி 2018’ நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் நிதின் கட்கரி வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில் “வாகன உற்பத்தியாளர்கள் இ-ரிக்‌ஷா போன்ற எலெக்ட்ரிக் ரக வாகனங்களை உற்பத்தி செய்யும்போது அவை நீண்ட காலத்துக்கு உழைக்கும் வகையில் தரமானதாக செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தரமான வாகனங்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் தொழில் துறைக்கே அது கெட்டப் பெயரை பெற்றுத் தரும். வாடிக்கையாளர்களுக்கும் அது அசெளகரியத்தைக் கொடுக்கும். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தித் துறையைப் பொறுத்தவரையில் பெரும் நிறுவனங்கள் பல இத்துறையில் கால் வைத்திருப்பதால் தரமான பொருள்கள் மட்டும் இனி நிலைத்து நிற்கும்.

எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களின் தரம் மீது இதுவரையில் அரசு எந்த விதிமுறைகளையும் அறிவிக்கவில்லை. அது உற்பத்தியாளர்களுக்கும் பயனாளர்களுக்கும் தற்போதைய சூழலில் சிரமத்தைத் தரும். வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக எத்தனால், மெத்தானால் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்த முன்வர வேண்டும்” என்றார்.

மேலும் பார்க்க:

First published: December 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...