125 கோடி மரங்கள்... தினமும் 40 கி.மீ. சாலை கட்டமைப்பு- நிதின் கட்கரி டார்கெட்!

கடந்த ஆட்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நாள் ஒன்றுக்கு 26 கி.மீ தூரம் சாலைக் கட்டமைப்பு மேற்கொண்டுள்ளார்.

125 கோடி மரங்கள்... தினமும் 40 கி.மீ. சாலை கட்டமைப்பு- நிதின் கட்கரி டார்கெட்!
நிதின் கட்காரி
  • News18
  • Last Updated: June 3, 2019, 6:24 PM IST
  • Share this:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சாலை ஓரங்களில் எல்லாம் சுமார் 125 கோடி மரங்களை நடப்போவதாகவும் நாள் ஒன்றுக்கு 40 கி.மீ தூரம் வரையில் சாலை கட்டமைப்பு மேற்கொள்ளப்போவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

புதிய அமைச்சரவையில் இம்முறையும் நிதின் கட்கரிக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கப்பட்டுள்ளது. புதிய மத்திய அமைச்சராக பல புதிய திட்டங்களை நிறைவேற்றப்போவதாக தனக்குத் தானே டார்கெட் வைத்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

கடந்த ஆட்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நாள் ஒன்றுக்கு 26 கி.மீ தூரம் வரையில் சாலைக் கட்டமைப்பு மேற்கொண்டுள்ளார்.


இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில், “சாலை வசதிகளை மேம்படுத்திவதில் மிகப்பெரிய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது ஏற்கெனவே மும்பை- டெல்லி இடையேயான நெடுஞ்சாலையில் பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இதற்கான பணி நிறைவடைந்துவிடும். இந்த முறை நாடு முழுவதும் 125 கோடி மரங்களை சாலை ஓரங்களில் நடத் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

மேலும் பார்க்க: புதிய ஹேர் ஸ்டைல் உடன் ட்ரம்ப்... கேலி செய்யும் ட்விட்டர்வாசிகள்..!
First published: June 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்