Home /News /automobile /

Datsun Brand உற்பத்தியை நிறுத்திய நிசான்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன.? 

Datsun Brand உற்பத்தியை நிறுத்திய நிசான்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன.? 

nissan redi-Go

nissan redi-Go

Nissan Datsun Brand | நிசான் தற்போது இந்தியாவில் 2020 டிசம்பரில் அறிமுகப்படுத்திய மேக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Magnite sub-compact SUV) மீது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. நிசான் நிறுவனம் இந்தியாவில் முற்றிலும் சரியாமல் மேக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காப்பாற்றி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    ஜப்பான் நாட்டின் நிசான் நிறுவனம் அதன் என்ட்ரி லெவல் பிராண்ட் நிறுவனமான டட்சன் நிறுவனத்தின் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. நிசான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தொழிற்சாலையில் redi-Go மாடல் காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கடந்த மாதம் 20ஆம் தேதி உறுதிப்படுத்தியது. இதனால் டட்சன் கார்கள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன, இப்போது உலகம் முழுவதும் டட்சன் கார்களில் ஒரு சில மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

    இந்தியாவில் நிசான் நிறுவனம் டட்சன் பிராண்டின் Go+, Go மற்றும் redi-Go போன்ற என்ட்ரி லெவல் கார்களை விற்பனை செய்து வந்தது. இந்தியாவில் குறைந்த விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்கள் குறைவால் பல ஆண்டுகளாக திணறி வந்த இந்த பிராண்ட் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் தற்போதுள்ள டட்சன் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் சேவை மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் நிசான் நிறுவனம் இந்த கார்களை உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது இந்த பிராண்ட் நிறுத்தப்பட்டுவிட்டது. 2020ம் ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தோனேசியாவில் இந்த மாடல் கார்களின் விற்பனையை நிசான் நிறுத்திவிட்டது.

    இதுகுறித்து நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள தொழிற்சாலையில் டட்சனின் redi-GO மாடல் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட மாடலின் விற்பனை தொடரும். வாடிக்கையாளர்களின் திருப்திக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். அது எப்போதும் தொடரும் என வருங்கால டட்சன் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம். மேலும் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் டீலர்களிடம் இருந்து விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும் என்றும், டட்சன் கார்களுக்கு கிடைக்கவேண்டிய வாரண்ட்டி போன்ற வசதிகள் அனைத்தும் கிடைக்கும்” என உறுதியளித்துள்ளது.



    நிசான் தற்போது இந்தியாவில் 2020 டிசம்பரில் அறிமுகப்படுத்திய மேக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Magnite sub-compact SUV) மீது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. நிசான் நிறுவனம் இந்தியாவில் முற்றிலும் சரியாமல் மேக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காப்பாற்றி வருகிறது. கவர்ச்சிகரமான தோற்றம், பெப்பி டர்போ எஞ்சின் மற்றும் எக்ஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் போன்ற சிறப்பம்சங்களுடன், கவர்ச்சிகரமான விலையில் கிடைப்பதால் இந்த எஸ்யூவி இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிசான் மேக்னைட் காரை ஆர்டர் செய்துள்ளனர். தனது போட்டியாளர்களான ஹூண்டாய் மற்றும் மாருதி போன்ற நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக, வாடிக்கையாளர்கள், டீலர் பார்ட்னர்கள் மற்றும் வணிகத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் முக்கிய மாதிரிகள் மற்றும் பிரிவுகளில் நிசான் கவனம் செலுத்த உள்ளது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile

    அடுத்த செய்தி