ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விபத்துகளை குறைக்க புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிசான்!

விபத்துகளை குறைக்க புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிசான்!

நிசான்

நிசான்

நிசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் முன்னணி உலகளாவிய ஆராய்ச்சியாளர் மற்றும் மேம்பாட்டாளர் ஆன டக்வோவ் அசாமி, "எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உரிமையாளர்களின் மேலதிக நம்பிக்கையை பெறும், போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் மற்றும் ஆளில்லா வாகனம் ஓட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறி உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நிசான் நிறுவனம் புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் பணிபுரியத் தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் உருவாகும் அதன் ஆளில்லா வாகனங்களுக்கான மோதல் தவிர்ப்பு அம்சத்தை (collision avoidance feature) மேம்படுத்த உதவும். வளர்ச்சியில் உள்ள இந்த தொழில்நுட்பமானது, வாகனத்தின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய மிகத் துல்லியமான, நிகழ்நேர தகவலை பயன்படுத்தி, மோதல் தவிர்ப்பை வியத்தகு முறையில் மேம்படுத்தவும், போக்குவரத்து விபத்துகளை குறைக்கவும் உதவும்.

மேலும் நிசான் நிறுவனம், ஜப்பானின் யோகோஹாமாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் ஒரு சோதனை வாகனத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட தொழில்நுட்த்தின் செயல் விளக்கத்தையும் நிகழ்த்தியது.

நிசானின் 'கிரவுண்ட் ட்ரூட் பர்செப்சன்' (ground truth perception) தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை உயர் செயல்திறன் கொண்ட லிடார் (LIDAR), ரேடார் மற்றும் கேமராக்களிலிருந்து தகவல்களை இணைக்கிறது.

இது பொருட்களின் வடிவம் மற்றும் தூரம், அத்துடன் வாகனத்தைச் சுற்றியுள்ள பகுதியின் கட்டமைப்பை, அதிக அளவிலான துல்லியத்துடன் நிகழ்நேரத்தில் கண்டறியும். இந்த தகவலை பயன்படுத்தி, ஒரு வாகனம் தற்போதைய நிலைமையை உடனடியாக பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வர முடியும் மற்றும் தேவையான மோதல்-தவிர்ப்பு செயல்பாடுகளை தானாகவே செய்ய முடியும்.

இந்த கார் தயாரிப்பாளரின் புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பம், தூரத்தில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலையில் உள்ள தடைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பாதையில் மாற்றங்களையும் செய்யும். மேலும் விரிவான வரைபடத் (மேப்) தகவல் கிடைக்காத பகுதிகளில் உள்ள ஓட்டுநர்களுக்கு, இந்த தொழில்நுட்பம் கூடுதல் ஆதரவை வழங்க முடியும்.

நிசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் முன்னணி உலகளாவிய ஆராய்ச்சியாளர் மற்றும் மேம்பாட்டாளர் ஆன டக்வோவ் அசாமி, "எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உரிமையாளர்களின் மேலதிக நம்பிக்கையை பெறும், போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் மற்றும் ஆளில்லா வாகனம் ஓட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறி உள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து மேம்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் நிசான் மற்ற அதிநவீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நிசான் நிறுவனத்தின் இந்த அமைப்பானது அடுத்த தலைமுறை லிடார் (LIDAR) ஆனது லுமினார்1 (Luminar1) உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. வெரிஃபிக்கேஷன் தொழில்நுட்பத்திற்காக, நிசான், அப்ளைடு இன்ட்யூஷன் 2 உடன் இணைந்துள்ளது, இது அதிநவீன சிமுலேஷன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

Also read... Meteor 350 மாடலில் புதிதாக 3 கலர்களை அறிமுகப்படுத்தி உள்ள ராயல் என்ஃபீல்டு

லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நிசான் அதன் நிசான் ஆம்பிஷன் 2030-ன் ஒரு பகுதியான விபத்துக்களை கணிசமாக குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த நிறுவனம் 2020-களின் நடுப்பகுதியில் அதன் கிரவுண்ட் ட்ரூட் பர்செப்சன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நிறைவு செய்து, இது தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களில் அணுக கிடைக்கும் என்று நம்புகிறது. குறிப்பாக 2030 நிதியாண்டுக்குள் ஒவ்வொரு புதிய மாடலிலும் இந்த தொழில்நுட்பம் இடம்பெறும்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile