Home /News /automobile /

Datsun உற்பத்தி நிறுத்தத்தை ஈடுகட்ட புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ள நிசான்.! தமிழக அரசு தகவல்

Datsun உற்பத்தி நிறுத்தத்தை ஈடுகட்ட புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ள நிசான்.! தமிழக அரசு தகவல்

Nissan

Nissan

Nissan | தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் அமைந்துள்ள நிசான் கார் உற்பத்தி ஆலை மூடப்படாது என்று கூறி இருக்கிறார். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியாவில் மலிவு விலை கார் பிராண்டான Datsun உற்பத்தியை நிறுத்தி இருக்கும் முடிவை ஈடுகட்ட புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், அதன் என்ட்ரி லெவல் பிராண்ட் நிறுவனமான டட்சன் நிறுவனத்தின் கார் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சமீபத்தில் அறிவித்தது.

இதை தொடர்ந்து நிசான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், சென்னை தொழிற்சாலையில் redi-Go மாடல் கார் உற்பத்தியை நிறுத்தி விட்டதையும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் ரெனால்ட் நிசான் நிறுவன ஆலை மூடப்பட உள்ளதாகவும்,தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து நிசான் மோட்டார்ஸின் டட்சன் உற்பத்தி நிறுத்த முடிவு பல தரப்பினரையும் கூர்ந்து கவனிக்க வைத்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ், சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா தொழிற்சாலை மூடப்படும் அபாயம் நிலவுகிறது, அப்படி மூடப்பட்டால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழப்பார்கள். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் அமைந்துள்ள நிசான் கார் உற்பத்தி ஆலை மூடப்படாது என்று கூறி இருக்கிறார். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியாவில் மலிவு விலை கார் பிராண்டான Datsun உற்பத்தியை நிறுத்தி இருக்கும் முடிவை ஈடுகட்ட புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ரெனால்ட்-நிசான் பார்ட்னர்ஷிப் மறுசீரமைப்பு யுக்தியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் Datsun பிராண்ட் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், ஒரு புதிய மாடலை விரைவில் அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறி இருக்கிறார்.



தமிழகத்தில் உள்ள ஒரகடம் ஆலையில் செமிகண்டக்டர் பற்றாக்குறை இருந்த போதிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்டோ நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்வதாக ரெனால்ட்-நிசான் மாநில அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். ரெனால்ட்-நிசான் தனது யூனிட்டை தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்த உறுதியான பல திட்டங்களை கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

Also Read : டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்னென்ன.?

தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தி ஆலையில் தற்போது நிசான் பிராண்டட் மாடல்களான ரெனால்ட் கிகர் மற்றும் க்விட் தயாராகிறது. இந்த கார்களை இந்திய சந்தையில் விற்பதைத் தவிர, இவற்றை 15 வெளிநாட்டு சந்தைகளுக்கும் ரெனால்ட்-நிசான் ஏற்றுமதி செய்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Tamil Nadu government

அடுத்த செய்தி