முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / அடி தூள்..! ரூ.6 லட்சத்திற்கு 7 சீட்டர் காரா..? தயாராகும் நிசான்..

அடி தூள்..! ரூ.6 லட்சத்திற்கு 7 சீட்டர் காரா..? தயாராகும் நிசான்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மிகவும் கம்மியான விலையில் எம்பிவ எனப்படும் மல்டி யுடிலிட்டி காரை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இது மாருதி சுசுகியின் எர்டிகாவிற்கு பெரிய போட்டியாக இருக்கும்…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்திய சாலைகளுக்கு ஏற்ற பல மாடல்களை அறிமுகம்  செய்து வெற்றிகரமான கார் தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் நிசான் நிறுவனம் சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் நடுத்தர மக்களும் வாங்கக் கூடிய பட்ஜெட் கார்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெரிய மற்றும் கூட்டுக்குடும்பங்கள் பயனடையும் வகையில் புதிய 7 சீட்டர் காரை குறைவான விலையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது நிசான் நிறுவனம்.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரின் அப்டேட்டட் வெர்சனாக  புதிய 7 சீட்டர் கார் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். இதற்கு மிக சிறந்த உதாரணமாக டொயோட்டா இன்னோவா, மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்ட சில கார் மாடல்கள் உள்ளன. அதிக உறுப்பினர்கள் கொண்ட கூட்டு குடும்ப வாசிகள் மத்தியிலேயே இந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதுபோன்ற வாடிக்கையாளர்களை குறிவைத்து தான் குறைந்த விலையில் 7 சீட்டர் காரை அறிமுகம் செய்ய உள்ளது நிசான். ரெனால்டின் மிகவும் பிரபலமான 7 சீட்டர் காரான டிரைபரை தழுவியே புதிய 7 சீட்டர் எம்பிவி காரை நிஸான் உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த புதிய 7 சீட்டரின் வருகை மாருதி சுஸுகி எர்டிகா போன்ற பிற முன்னணி எம்பிவி ரக கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள TVS Motor..! - காரணம் இதுதான்..!

ரெனால்ட் டிரைபரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. புதிய 7 சீட்டர் டிரைபரை தழுவியதாக உருவாக்கப்பட்டாலும் அதன் தோற்றம் மேக்னைட்டை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளித்தோற்றம் மேக்னட்டை போல இருந்தாலும், கேபின் மற்றும் சில உட்கட்டமைப்புகள் டிரைபரைப் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

தனியாக கழட்டும் வசதிக் கொண்ட கடைசி வரிசை இருக்கை, எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட், 8 அங்குல திரை (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது) உள்ளிட்ட அம்சங்களும் ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் நிஸானின் புதிய மேக்னைட் காரில் இடம் பெற இருக்கின்றது. இதன் விலை ரூ. 6 லட்சம் ரூ. 9 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்தக் கார் விற்பனைக்கு வந்த பிறகு எர்டிகா கடுமையான போட்டியை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

First published:

Tags: Automobile, Car