HOME»NEWS»AUTOMOBILE»nissan to hire 1000 employees to increase magnite suv production aru

மேக்னைட் எஸ்யூவிக்காக ஆயிரம் பேரை பணியமர்த்தும் நிசான் நிறுவனம்

மேக்னைட் மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் தனது ஆலையில் 3வது ஷிஃப்ட்டை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேக்னைட் எஸ்யூவிக்காக ஆயிரம் பேரை பணியமர்த்தும் நிசான் நிறுவனம்
மேக்னைட் மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் தனது ஆலையில் 3வது ஷிஃப்ட்டை அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • Share this:

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில்  மேக்னைட் எனும் சப் காம்பாக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது.

வாடிக்கையாளர்களிடையே மேக்னைட் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக நிசான் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேக்னைட் எஸ்யூவிக்கு சுமார் 33,000 புக்கிங்குகள் கிடைத்திருப்பதாகவும், ஒரு லட்சத்து என்பதாயிரத்துக்கு
மேற்பட்ட விசாரிப்புகள் வந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதன் காரணமாக மேக்னைட் மாடலுக்கு காத்திருப்பு காலம்
அதிகரித்திருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் தனது ஆலையில் 3வது ஷிஃப்ட்டை அமல்படுத்த இருப்பதாகவும் இதற்காக 1,000 பேரை புதிதாக பணியமர்த்த இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மேக்னைட் மாடலுக்கான காத்திருப்பு காலத்தை இரண்டு - மூன்று
மாதங்களாக குறைக்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிசான் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி அஷ்வானி குப்தா கூறுகையில், “ வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மேக்னைட் மாடலின் காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில் எங்களில் ஆலையில் 3வது ஷிஃப்ட்டை அமல்படுத்தி அதில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த உள்ளோம், இதன் மூலம் இக்கட்டான காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 



சமீபத்தில் நிசான் மேக்னைட்  காருக்கு ASEAN NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர ரேட்டிங் கிடைத்துள்ளது. மேக்னைட் காரானது ரூ. 5.48 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து கிடைக்கிறது.

மேக்னைட் எஸ்யூவி 20 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ரூ. 5.48 லட்சம் முதல் ரூ.9.59 லட்சம் வரையில் வேரியண்ட்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

கியாவின் சோனட், டாடா நெக்ஸான், மாருதி விடாரா பிரெஸ்ஸா, ஹுண்டாய் வென்யூ, டொயோட்டாவின் அர்பன் கிரூசர், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 300 மற்றும் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு மேக்னைட் மாடல் போட்டியாக விளங்குகிறது.
First published: