Home /News /automobile /

நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் SUV இந்தியாவில் அறிமுகம் - விலை உள்ளிட்ட முழுமையான விவரங்கள்!

நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் SUV இந்தியாவில் அறிமுகம் - விலை உள்ளிட்ட முழுமையான விவரங்கள்!

ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான நிசான்

ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான நிசான்

Nissan Magnite Red : புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷனின் விலை ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான நிசான், இந்திய சந்தையில் புதிய Nissan Magnite RED Edition SUV மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷனின் விலை ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது (ex-showroom, Delhi). காட்சி நுட்பம், ஆற்றல் நிரம்பிய செயல்திறன், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் RED பதிப்பின் கம்பீரமும் விவேகமும் கொண்ட இந்தக் கார் இந்திய வாடிக்கையாளர்களின் பயணங்களை மறுவரையறை செய்யும்.

    புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலின் கிரில், முன்புற பம்ப்பர் கிளாடிங்(bumper cladding), வீல் ஆர்ச், பக்கவாட்டில் பாடி கிளாடிங் உள்ளிட்டவைகளில் மீது ரெட் அக்செண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பாடி கிராபிக்ஸ், பின்புற டெயில்கேட்டில் குரோம் கார்னிஷ், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், ரெட் எடிஷன் பேட்ஜ் போன்றவையும் உள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், PM 2.5 air filter, LED scuff plate, மற்றும் ambient mood lighting போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    நிசான் மேக்னைட் XV வேரியண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன்(touchscreen) மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ(Android Auto & Apple Carplay), புஷ் பட்டன் ஸ்டார்ட்(Push Button Start/Stop), ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.

    இத்துடன் ஏராளமான ஏர்பேக்(air bags), ஏ.பி.எஸ்., இ.பி.டி., வெஹிகில் டைனமிக்ஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ALSO READ | TVS Ronin - புதிய ஸ்மார்ட் பைக் அறிமுகம்... விலை ரூ.1.49 லட்சம்!!

    இதில் இருக்கும் Big, Bold, Beautiful Nissan Magnite அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் முன்பதிவுகள் செய்யப்பட்டதோடு, நாடு முழுவதும் பல வீடுகளில் மறக்கமுடியாத தருணத்தை உருவாக்கியிருக்கிறது என்று Nissan Motor India நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த Nissan Magnite RED, ஆர்வமுள்ள இளைஞர்கள் குறிப்பாக தொழில்நுட்ப ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான பரிணாம வளர்ச்சிக்கும், தற்போது உள்ள முக்கிய தேவையை துரிதப்படுத்துவதற்க்கும் மிக முக்கியமானதாக விளங்குகிறது.

     



     

    RED ன் மாடல்கள் 1 லிட்டர் MT, 1 லிட்டர் Turbo MT மற்றும் 1 லிட்டர் Turbo CVT வகைகளில் வருகிறது. ஜப்பானில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் நிசான் மேக்னைட்டின் இந்த அமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களால் இவை SUV பிரிவில் தனித்து நிற்கின்றன. Magnite ,HRA0 1 லிட்டர் டர்போ எஞ்சினுடன் வருகிறது, இது அதிகபட்சமாக 100PS ஆற்றலுடனும், 160Nm முறுக்குவிசையையுடனும் செயல்படும், அதே நேரம் இது சந்தையில் அதிக எரிபொருள் திறன் கொண்ட (20kmpl) B-SUVகளில் ஒன்று எனவும் கூறலாம்.

    Magnite RED பதிப்பு மிகவும் பிரபலமான Magnite XV வகையை சேர்ந்தது.Magnite XV MT RED பதிப்பு, Magnite Turbo XV MT RED பதிப்பு, மற்றும் Magnite Turbo XV CVT RED பதிப்பு. Magnite RED பதிப்பு என இதில் மூன்று வகைகள் உள்ளன.

    இது ஓனிக்ஸ் பிளாக் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் (Onyx Black and Storm White.) என்று இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் விலை பட்டியல்:















    நிசான் மேக்னைட் MT XV ரெட் எடிஷன்ரூ. 7,86,500
    நிசான் மேக்னைட் டர்போ XV ரெட் எடிஷன்ரூ. 9,24,500
    நிசான் மேக்னைட் டர்போ CVT XV ரெட் எடிஷன்ரூ. 9,99,900

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (ex-showroom, Delhi) அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Suv car

    அடுத்த செய்தி