இந்தியாவில் விற்பனையாகும் நிசான் கிக்ஸ் எஸ்யூவி-க்கு ரூ.95,000 வரை தள்ளுபடிகள் அறிவிப்பு!

நிசான் கிக்ஸ் எஸ்யூவி-க்கு தள்ளுபடிகள் அறிவிப்பு

திக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நிசானின் BS6 இணக்கமான கிக்ஸ் எஸ்யூவியை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, ஒரு அற்புதமான தள்ளுபடி அறிவிப்பை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி நிசான் கிக்ஸ் எஸ்யூவி-யை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ் மற்றும் லாயல்ட்டி நன்மைகள் உள்ளிட்ட சலுகைகளைப் பெற முடியும். இருப்பினும், இந்த சலுகைகள் வாகனத்தின் ஸ்டாக் இருக்கும் வரை கிடைக்கும் என்றும் அல்லது மார்ச் 31, 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதவிர அனைத்து அரசு அல்லது PSB அல்லது PSU நிறுவன ஊழியர்களுக்கும், ஜப்பானிய கார் நிறுவனம் LTC சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், நிறுவனம் வழங்கும் சலுகைகள் ஒவ்வொரு மாநிலத்தை பொருத்தும் மாறுபடும் என்பதை வாங்கனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது தொடர்பாக நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, காம்பாக்ட் எஸ்யூவியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மொத்த சலுகைகள் ரூ.95,000 வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த மொத்த சலுகையில், ரூ.25,000 மதிப்புள்ள ரொக்க தள்ளுபடியும், ரூ.50,000 பரிமாற்ற போனஸும் அடங்கும்.

நிறுவனம் வழங்கும் லாயல்ட்டி போனசின் மதிப்பு ரூ.20,000 ஆகும். இருப்பினும், லாயல்ட்டி போனஸ் கூடுதல் பரிமாற்ற போனஸாக மட்டுமே வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிக்ஸ் எஸ்யூவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட பரிமாற்ற நன்மைகளை NIC செயல்படுத்தப்பட்ட டீலர்ஷிப்பில் மட்டுமே பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், நிசான் நிறுவனம் மாக்னைட் சப்-காம்பாக்ட் எஸ்யூவிக்கு எந்தஒரு தள்ளுபடியையோ அல்லது பிற சலுகைகளையோ வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read... மின்சார வாகனமாக மாற்றியமைக்கப்பட்ட டாடா ஏஸ் - அதிகபட்சம் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் செல்லும்!

நிசான் கிக்ஸ் எஸ்யூவி-யின் அம்சங்களை பொறுத்தவரை, இந்த மாடலை இந்தியாவில் எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரீமியம் மற்றும் எக்ஸ்வி பிரீமியம் (O) ஆகிய எட்டு வகைகள் மற்றும் நான்கு டிரிம் நிலைகளில் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம் பெட்ரோல் ஒன்லி எஸ்யூவி மற்றும் இரண்டு பெட்ரோல் என்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. இரண்டு பெட்ரோல் என்ஜின்களில் 1.3 எல் டர்போ-பெட்ரோல் எஞ்சினும் அடங்கும். இது 154 ஹெச்பி மற்றும் 254 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மற்றொன்று 1.5 எல் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்சின் ஆகும். இது 105 ஹெச்பி மற்றும் 142 என்எம் பீக் டார்க் திறனை உற்பத்தி செய்கிறது.

அதேபோல, டிரான்ஸ்மிஷன் விருப்பங்களை பொறுத்தவரை 5-ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி ஆட்டோமேட்டிக் யூனிட் ஆகியவை அடங்கும். இந்த கார் விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் என எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நிசான் கிக்ஸின் போட்டி வாகனங்களில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகியவையும் அடங்கும். அதுமட்டுமல்லாது, நிசான் நிறுவனம் தனது முழு தயாரிப்புகளுக்கும் விலை உயர்வு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 2021 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: