Home /News /automobile /

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த நிசான் கார் நிறுவனம்..

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த நிசான் கார் நிறுவனம்..

Nissan Kicks SUV : ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்த 2022 மார்ச் மாதத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அற்புதமான தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Nissan Kicks SUV : ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்த 2022 மார்ச் மாதத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அற்புதமான தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Nissan Kicks SUV : ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்த 2022 மார்ச் மாதத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அற்புதமான தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்த 2022 மார்ச் மாதத்தில் தனது தயாரிப்பான கிக்ஸ் எஸ்யூவி-க்களை (Kicks SUV)வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அற்புதமான தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நிசான் இந்தியா அறிவித்துள்ள சலுகைகளை வாடிக்கையாளர்கள் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ் போன்ற வடிவங்களில் கிக்ஸ் எஸ்யூவி-க்களை வாங்கும்போது பெற முடியும். இருப்பினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை அல்லது மார்ச் 31, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும். நிசான் இந்தியா Magnite சப்-காம்பாக்ட் SUV மீது எந்த தள்ளுபடியையும், சலுகைகளையும் வழங்கவில்லை.

Kicks SUV மீதான சலுகைகள் தொடர்பாக நிசான் இந்தியா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வழங்கி உள்ள விவரங்களின்படி, காம்பாக்ட் எஸ்யூவி-யில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மொத்த நன்மைகள் ரூ. 1 லட்சம் வரை ஆகும். கிக்ஸ் எஸ்யூவி 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பவர்டிரெயின் உள்ளிட்ட வேரியன்ட்டில் கிடைக்கிறது. நிசான் நிறுவனம் இரண்டு வேரியன்ட்களுக்குமே சலுகைகளை அறிவித்துள்ளது.

also read : 21 ஆண்டுகளில் 30 லட்சம் மோட்டார் வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஹோண்டா நிறுவனம்!
 

இதன்படி 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷனில் உள்ள கிக்ஸ் கார்களுக்கு ரூ. 15,000 கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.70,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். நிசான் இந்தியாவின் வெப்சைட்டில் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 கூடுதலாக ஃபிக்ஸ்டு புக்கிங் போனஸைப் பெறலாம். Nissan Kicks-ன் இந்த வேரியான்ட்டை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 கார்ப்பரேட் பெனிஃபிட்டையும் பெறலாம். டர்போ பெட்ரோல் வேரியன்ட் XV, XV பிரீமியம், XV பிரீமியம் (O), மற்றும் XV பிரீமியம் (O) டூயல் டோன் ஆகிய 4 டிரிம்களில் வருகிறது. ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு CVT ஆட்டோமேட்டிக் யூனிட் ஆகியவை அடங்கும். சலுகை அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.



1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.8,000 வரை கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கும். பிற நன்மைகளில் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 2,000 ஆன்லைன் புக்கிங் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் பெனிஃபிட் ஆகியவை அடங்கும். கிக்ஸின் 1.5-லிட்டர் வெர்ஷன் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. XL மற்றும் XV ஆகிய இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது. இந்த சலுகைகள், பலன்களானது வேரியன்ட்கள் மற்றும் இருப்பிடங்களை பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், NIC-எனேபிள்டு டீலர்ஷிப்களில் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட்டை பெற முடியும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Car

அடுத்த செய்தி