• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நவம்பர் மாதம் முழுவதும் ரூ.1 லட்சம் வரையிலான ஆபர்களை வழங்கும் Nissan!

நவம்பர் மாதம் முழுவதும் ரூ.1 லட்சம் வரையிலான ஆபர்களை வழங்கும் Nissan!

நிசான்

நிசான்

சலுகைகள் ரொக்கத் தள்ளுபடி, பரிமாற்ற நன்மைகள் மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் வடிவில் கிடைக்கும்.

  • Share this:
ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளரான நிசான் நிறுவனம் இந்த நவம்பர் மாதம் முழுவதும் Kicks SUV வாகனத்தை வாகும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை சிறப்புப் நன்மைகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்திற்கான தள்ளுபடி விவரங்கள் குறித்து நிசான் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த சலுகைகள் ரொக்கத் தள்ளுபடி, பரிமாற்ற நன்மைகள் மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் வடிவில் கிடைக்கும். நிசானின் அதிகாரபூர்வ இணையதளத்தின்படி, இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை அல்லது ஸ்டாக்குகள் இருக்கும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசான் கிக்ஸ் (Kicks) எஸ்யூவி 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5-லிட்டர் பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது. மேலும் வாகனத்தின் இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் சலுகைகள் என்பது மாறுபடுகிறது. அதாவது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்சனில் இருக்கும் கிக்ஸ் வாகனம் ரூ. 70,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் ரூ.15,000 ரொக்க தள்ளுபடியில் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து நிசான் இணையதளத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

நவம்பர் 30 ஆம் தேதி வரை நிசான் கிக்ஸின் இந்த வேரியண்ட்டை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 கார்ப்பரேட் ஆதாயத்தைப் பெறலாம். டர்போ பெட்ரோல் வேரியண்ட் XV, XV பிரீமியம், XV பிரீமியம் (O), மற்றும் XV பிரீமியம் (O) டூயல் டோன் ஆகிய நான்கு வகைகளில் வருகிறது.

அதேபோல, சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்டை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவி-க்கு ரூ.10,000 வரை தள்ளுபடி பெறுவார்கள். மற்ற நன்மைகளை பொறுத்தவரை ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.5,000 ஆன்லைன் புக்கிங் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் நன்மைகள் ஆகியவை அடங்கும். ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வரும் 1.5 லிட்டர் வேரியண்ட் XL மற்றும் XV ஆகிய இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது. நிசான் கிக்ஸின் ஆரம்ப விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ 9.50 லட்சம் ஆகும்.

Also read... மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக "E-Amrit" போர்ட்டலை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு!

மறுபுறம், நிசான் சமீபத்தில் தனது சந்தா சேவைகளை புனே, மும்பை மற்றும் பெங்களூருக்கு ஆகிய இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக Zoomcar மற்றும் Orix உடன் இணைந்து, Nissan இப்போது டெல்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் புனே ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. அதன் சந்தா சேவைகள் மூலம், இந்த நகரங்களில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக நிசான் மற்றும் டட்சன் கார்களை வாடகைக்கு எடுக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: