2020ம் ஆண்டு முடிவடையப்போகும் நிலையில் இருப்பதால், தங்களிடம் இருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்ய ஆட்டோ மொபைல் துறையைச் சேர்ந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
குறிப்பாக முன்னணி நிறுவனங்களான டாடா, மகேந்திரா, ஹோண்டா, ஃபோர்டு நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் நிறுவன கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அந்தவகையில் நிசான் நிறுவனமும் Nissan kick SUV மாடல் கார்களுக்கு ரூ.65,000 வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட நிசான் கிக்ஸ் (Nissan Kick) மாடல் கார்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், முதலில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத இந்த மாடல் கார்கள், விற்பனையாளர்கள் வழங்கிய கூடுதல் சலுகையால் மெதுவாக வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வுகளுள் ஒன்றாக மாறியது. சமீபகாலமாக நிசான் கிக்ஸ் மாடல் கார்கள் சாலைகளில் தென்படுவதால், கூடுதல் சலுகைகளை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இறுதி ஆண்டு ஆபரில் ரூ.65,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் நிசான் கிக்ஸ் காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 பணச்சலுகை வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகை ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் நினைத்தால் Accessories சலுகைகளை கூடுதலாக வழங்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நிசான் கிக்ஸ் கார்கள் பெட்ரோல் மாடலில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் காரின் என்ஜின் 154 குதிரைத்திறனும், 254nm திறனை வெளிப்படுத்துபவையாக இருந்தன. தற்போது, 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் 105 குதிரைத்திறன் (BHP) மற்றும் 142 என்.எம்-ஐ வெளிப்படுத்துபவையாக உள்ளன.
இந்த கார்களுக்கு டர்போ என்ஜின் உடன் சிவிடி மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் டீசல் வகை கார்களையும் அறிமுகப்படுத்த நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் மத்திய அரசிடமிருந்து NIC சான்றிதழ் பெற்றுள்ள விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Nissan GT-R மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Nissan Magnite மாடல் கார்களுக்கு எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.