நைன்ட்டி ஒன் சைக்கிள்ஸ் (Ninety One Cycles) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மெராக்கி எஸ்7 (Meraki S7) என்ற புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை ரூ.34,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய தயாரிப்பு ஹீரோ லெக்ட்ரோவின் F2i உட்பட மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ninety One Cycles நிறுவனம் Meraki-யின் அறிமுகத்திற்கு பின்னர் தற்போது அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் சைக்கிளாக Meraki S7-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஒரு வசதியான சிட்டி ரைடிங் அனுபவத்தை வழங்குமென்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த புதிய Meraki S7 சைக்கிளானது, ஒரிஜினல் மெராக்கியின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
கூடுதலாக ஷிமானோ டூர்னி 7-ஸ்பீட் கியர்செட் (Shimano Tourney 7-Speed Gearset) , 5-மோட் பெடல் அசிஸ்ட் (5-Mode Pedal Assist) ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் யூஸர்களின் வசதிக்காக ஸ்பீட் இண்டிகேஷனுடன் (speed indication) கூடிய ஸ்மார்ட் LCD-யை கொண்டுள்ளது.
ரெயின் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் தவிர இந்த புதிய Meraki S7 எலெக்ட்ரிக் சைக்கிளானது 160 MM டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் ஹை-டிராக்ஷன் நைலான் டயர்களுடன் வருகிறது. இது ரைடர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. Ninety One நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரயான சச்சின் சோப்ரா கூறி இருப்பதாவது, "ஒரு நாளைக்கு 30-40 கிமீ சவாரி செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நகர்ப்புற இயக்கத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய பொறியியல்-ரீதியாக நன்கு வடிவமைக்கப்பட்ட E-பைக்கை அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கம்.
அந்த வகையில் புதிய Meraki S7-ஐ சேர்ப்பது எங்கள் நிறுவனத்தின் E-பைக் போர்ட்ஃபோலியோவையும், வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார். இதற்கிடையில் Avaana Capital, Titan Capital, A91 Partners மற்றும் Fireside Ventures போன்ற மார்க்யூ முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட மூலதன நிதி குஜராத்தில் உள்ள அதன் உற்பத்தி வசதிகளை வலுப்படுத்த பயன்படுத்தப்படும் என்று Ninety One Cycles நிறுவனம் கூறி இருக்கிறது.
Also Read : புதிய சாதனைப் படைத்த Harley-Davidson Sportster S
Ninety One Cycles-ன் இணை நிறுவனரும், டிஜிட்டல் தலைவருமான விஷால் சோப்ரா பேசுகையில், " நியூ-ஏஜ் பிளாட்ஃபார்ம்கள் மூலம் எப்போதும் நுகர்வோருடன் ஆழமான பிராண்ட் இணைப்பை உருவாக்குதல் மற்றும் எங்கள் தயாரிப்புகளை முன்னிலைபடுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது. எங்கள் டிஜிட்டல் (வெப்சைட் மற்றும் மார்க்கெட் ப்ளேஸ்) மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் முழுவதும் எங்கள் தயாரிப்புகளைக் கண்டறியவும், பரிசீலிக்கவும், வாங்க நுகர்வோருக்கு தடையின்றி வழிவகை செய்வதன் மூலம், omni-channel திறன்களில் முதலீடு செய்து வருகிறோம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bicycle