Roadlark Cargo: ஒரு சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் சைக்கிள்: அசத்தும் சிறப்பம்சங்கள்..

Roadlark Cargo

இந்த சைக்கிளில் அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்

  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் மிக முக்கிய மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான நெக்ஸு மொபிலிட்டி (Nexzu Mobility) நிறுவனம் ரோடு லார்க் கார்கோ (Roadlark Cargo) என்ற சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சைக்கிளுக்கு ரூ.42,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

    இந்த சைக்கிளில் 50கி அளவுக்கு பாரம் ஏற்றலாம். இந்த சைக்கிள் இரண்டு வகையான பேட்டரிகளை கொண்டது. ஒரு பேட்டரி மாற்றப்படாத வகையிலும், மற்றொன்று மாற்றப்படக் கூடிய வகையிலும் இருக்கும். இந்த சைக்கிளில் அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சைக்கிளில் முன்பக்கம் ஒரு கேரியரும், ஓரளவுக்கு கனமான எடையைத் தாங்கக்கூடிய வகையில் உலோகத்தால் ஆன கேரியரையும் கொண்டுள்ளது. மேலும் சைக்கிளின் இரண்டு பக்கங்களிலும் சிறிய லக்கேஜ் பேக் வசதியும் உள்ளது. அதிலும் பொருட்கள் வைத்துக்கொள்ளலாம்.

    இது உணவகம், சூப்பர் மார்க்கெட், அதிமுக்கியமான விஷயங்களை கொண்டு செல்பர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இது பயன்படும். இந்த சைக்கிளின் பேட்டரிகள் 250W 36V BLDC எலக்ட்ரிக் மோட்டோர் கொண்டது. இது பெட்லெக் (Pedlec) மோடில் 100 கி.மீ வரையிலும் த்ரோட்டில் (Throttle) முறையில் 75 கி.மீ வரையிலும் பயணிக்கலாம். இந்த சைக்கிளை மூன்று அல்லது நான்கு மணி நேரமும் சார்ஜ் செய்தால் இரண்டு பேட்டரிகளும் முழு சார்ஜை பெறும்.

    இந்த சைக்கிள் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளை கொண்டுள்ளது. மேலும் இதில் டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளது. அது பேட்டரி சார்ஜ் அளவு உள்ளிட்டவற்றை இந்த டிஸ்பிளே மூலம் கண்டறியலாம். ரோட்லார்க் கார்கோ மிக கனமான உலோகத்தால் ஆனதால் கடினமான சாலைகளிலும் இலகுவாக பயணிக்கும். மேலும் இரண்டு டிஸ்க் பிரேக் என பாதுகாப்பு முறைகள் கொண்டது.

    நெக்ஸு மொபிலிட்டியின் சிஎம்ஓ பங்கஜ் திவாரி,  "கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவில் ஈ காமர்ஸ் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் நிறைய நிறுவனங்களுக்கு தங்கள் பொருட்களை டெலிவரி செய்வது கடினமானதாக இருக்கிறது. இந்த புதிய ரோடுலார்க் கார்கோ இதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கட்டிங் எட்ஜ் வகை, டெலிவரி செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், டெலிவரி செய்பவர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் பொருட்கள் கிடைப்பது சுலபமானதாக இருக்கும்.

    மக்கள் தற்போது இ-காமர்ஸ் மின்னணு முறையில் பொருட்களை வாங்கி வரும் இந்த சூழ்நிலையில் வாகனப்போக்குவரத்து இன்னும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தேவை அதிகரித்து இன்னும் விலையற வாய்ப்பிருக்கிறது. இத்தகைய சூழலில் இவ்வகை எலக்ட்ரிக் சைக்கிள் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
    Published by:Arun
    First published: