ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

அசத்தலாக உருவாகும் புதிய ‘தார்’…! காத்திருக்கும் கார் பிரியர்கள்..!

அசத்தலாக உருவாகும் புதிய ‘தார்’…! காத்திருக்கும் கார் பிரியர்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதிய தார் எப்போது வரும் எனக் காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். அடுத்த மாதம் 13ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தார் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனம் மஹிந்த்ரா நிறுவனம். எஸ்யுவி ரக கார்கள் தயாரிப்பிலும் தற்போது முன்னனியில் இருக்கிறது. மஹிந்த்ரா நிறவனத்தின் எஸ்யுவி ரக கார்கள் நேர்த்தியான வடிவமைப்பு, உறுதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக இந்திய வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

எஸ்யுவி ரக கார்கள் மட்டுமல்ல தார் என்ற பெயரில் நகர்ப்புற மற்றும் ஆஃப்ரோடு ரைடிற்காக பிரத்யேகமான வாகனத்தை தயாரித்து, அதை வெற்றிகரமாக சந்தைப்படுத்தியும் வருகிறது மஹிந்த்ரா நிறுவனம்.

Read More : ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தார் வாகனத்தில் மூன்று கதவுகள் மட்டுமே இருக்கும். அதோடு ஆஃப் ரோடு ரைட் வாகனம் என்பதால் அவ்வளவு நேர்த்தியான இன்டீரியர் இருக்காது. ஆனால் இப்போது உருவாகும் புதிய தார் மற்ற கார்களைப் போல 5 கதவுகளுடன் அசத்தலான இன்டீரியர் அமைப்புகளுடன் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு அறிமுகம் ஆக உள்ள புதிய தாரின் டிசைன் மற்றும் சிறப்பு அம்சங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை,

புதிய தாரில் ஹெட் லைனர் மற்றும் ஆர்ம் ரெஸ்ட்  உள்ளிட்ட அம்சங்கள் இடம் பிடித்துள்ளன. கேபின் உட்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. தற்போது இருக்கும் தாரை விட கொஞ்சம் அதிகப்படியான வீல் பேஸ் இருக்கும் எனத் தெரிகிறது.
பின்புற இருக்கையில் அமர்பவர்கள் வசதியாக உட்காரும் வகையில் லெக் ரூம் கொஞ்சம் அதிகமாக கிடைக்குமாறு புதிய தார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தார் லைட் டாப், ஹார்ட் டாப் என இரண்டு வகைகளில் கிடைத்தது. ஆனால் புதிய ஐந்து கதவுடன் தயாராகி வரும் தார், ஹார்ட் டாப்பாக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும் புதிய மாடலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
எஞ்சின் மற்றும் திறன் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதே 2.0லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் தான் புதிய மாடலும் தயாரிக்கப்படுகிறது. ஃபோர்ஸ் நிறுவனத்தின் புது வரவான கூர்கா-விற்கு இந்த புதிய தார் சரியான போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
புதிய மாடலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மஹிந்த்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றாலும், புதிய தாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய தார் எப்போது வரும் எனக் காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். அடுத்த மாதம் 13ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தார் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. மற்ற நிறுவனங்களின் புதிய வரவுகளுக்கு தார் சரியான சவாலாக அமையப் போகிறது
First published:

Tags: Automobile, Car, New Year 2023, Thar