Home /News /automobile /

யமஹா நிறுவனத்தின் புதிய 'ப்ளூ ஸ்கொயர்' பிரீமியம் ஷோரூம் - தமிழ்நாட்டில் 2 இடங்களில் வருகிறது.

யமஹா நிறுவனத்தின் புதிய 'ப்ளூ ஸ்கொயர்' பிரீமியம் ஷோரூம் - தமிழ்நாட்டில் 2 இடங்களில் வருகிறது.

 "ப்ளூ ஸ்கொயர்" ஷோரூம்

"ப்ளூ ஸ்கொயர்" ஷோரூம்

Yamaha Blue Square Showroom : ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான கொள்முதல் மற்றும் உரிமை அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India


    யமஹாவின் "ப்ளூ ஸ்கொயர்" ஷோரூம் அவுட்லெட் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள், ஆடைகள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் ஆகியவற்றைக் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியச் சந்தையில் யமஹா மோட்டார் (IYM) பிரைவேட் லிமிடெட் வாகன உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில் "ப்ளூ ஸ்கொயர்" ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு யமஹாவின் படைப்பு மற்றும் உற்பத்தியைத் தெரியப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தற்போது தமிழகத்தில் 2 புதிய "ப்ளூ ஸ்கொயர்" விற்பனை நிலையங்களைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் வேலூரில் காகிதப்பட்டறையில் உள்ள வேதா மோட்டோ கார்ப் 1484 சதுர அடி பரப்பளவில் மற்றும் மயிலாடுதுறை ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள ஸ்ரீ புவனேஷ்வரி மோட்டார்ஸ் 1615 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது விற்பனை, சேவை மற்றும் உதிரிப் பாக ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Also Read : August Special | ராயல் என்ஃபீல்டு டூ ஹோண்டா வரை புதிய பைக் அறிமுகங்கள்.!

    யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு ஈஷின் சிஹானா இது குறித்துப் பேசுகையில், "தி கால் ஆஃப் தி ப்ளூ' பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தமிழில் 2 புதிய ப்ளூ ஸ்கொயர் ஷோரும்களை அறிமுகப்படுத்துவதில் யமஹா உற்சாகமாக உள்ளது. இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில், எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான கொள்முதல் மற்றும் உரிமை அனுபவத்தை வழங்க விரும்புகிறோம்.

    பிரத்தியேக விற்பனை நிலையத்தின் சூழல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிராண்டுடன் தொடர்பு கொள்ளவும், தயாரிப்பு தகவல்களைப் பெறவும் மற்றும் யமஹா பாகங்கள் மற்றும் ஆடைகளின் வரம்பைப் பார்க்கவும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

    Also Read : ஆகஸ்ட் 15-ல் புதிய தயாரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள Ola Electric

    ப்ளூ ஸ்கொயர் மூலம் பிரத்தியேகமாக AEROX 155 விற்கப்படுகிறது. அதைத் தவிரப் பிற யமஹா மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கவர்ச்சிகரமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது. புதிதாகத் தொடங்கப்பட்ட விற்பனை நிலையங்களுடன், யமஹா தற்போது 25 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. மொத்தத்தில், இந்தியா முழுவதும் பிரீமியம் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் கால்தடம் 77 விற்பனை நிலையங்களில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Janvi
    First published:

    Tags: Automobile, Yamaha, Yamaha bike

    அடுத்த செய்தி