ரூ.48,400 விலையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்

news18
Updated: August 23, 2018, 4:42 PM IST
ரூ.48,400 விலையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்
news18
Updated: August 23, 2018, 4:42 PM IST
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்  110 சிசி திறன் கொண்ட புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடைய விலை 48,400 ரூபாய்.

டிவிஎஸ் ரேடியோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், ஹரிசாண்டல் டிசைனில் வடிமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் முழுவதும் குரோம் டிசைனிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வண்டியின் ஹெட்லாம்ப்பை பொறுத்தவரை, குரோம் பெஸெல் லைட்ஸ்களுடன் பகல் வேளையில் எறியக்கூடிய பல்புகளும் உள்ளன.
ரேடியோனின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்.

ரேடியோனின் பெட்ரோல் டேங்கில் கால்களை கிரிப்பாக வைத்து கொள்ள ஏதுவாக ‘தை பேட்கள்’ இடம்பெற்றுள்ளன. மேலும் குரோம் ஃபினிஷ்ட் ஸ்பீடோமீட்டர், ஷாக் அப்சார்பர் மற்றும் சைலன்சர் ரேடியோனுக்கு ஒரு ஸ்டைலிஷ் லுக்கை தருகின்றன.

109.7 சிசி இன்ஜின் கொண்ட ரேடியோன் 7000 ஆர்.பி.எம்முக்கு 4 பி.எஸ் பவர் கொண்டது. மேலும் இந்த பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டான்க், பைக் ஸ்கிட் ஆவதை தடுக்கம் வகையில் நவீன பிரேக்கிங் சிஸ்டம், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் என அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் இது 1 லிட்டருக்கு 69.3 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.

Loading...

ரேடியோன் பைக்குக்கு டிவிஎஸ் நிறுவனம் 5 வருடங்கள் வாரண்டி வழங்கியுள்ளது. இந்த பைக் வெள்ளை, பீஜ்(பழுப்பு நிறம்), பர்பிள் மற்றும் கருப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
First published: August 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...