Home /News /automobile /

புதிய Toyota Glanza vs புதிய Maruti Suzuki Baleno... வேறுபாடுகள் என்ன?

புதிய Toyota Glanza vs புதிய Maruti Suzuki Baleno... வேறுபாடுகள் என்ன?

Toyota

Toyota

2022 பலேனோவை அடிப்படையாக கொண்ட புதிய கிளான்ஸாவை (New Glanza) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தது டொயோட்டா நிறுவனம். 

கடந்த மாதம் இந்தியாவில் அதிக அளவில் புதுப்பிக்கப்பட்ட பலேனோவை (Baleno) மாருதி சுசுகி அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து 2022 பலேனோவை அடிப்படையாக கொண்ட புதிய கிளான்ஸாவை (New Glanza) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தது டொயோட்டா நிறுவனம்.

முன்னதாக புதிய பலேனோவின் அறிமுகத்திற்கு முன்ப இந்தியாவில் 2022 டொயோட்டா க்ளான்ஸாவின் விலைகள் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் க்ளான்ஸாவை போலவே, Glanza-வின் புதிய மாடலும் கூட (Baleno-வை அடிப்படையாக கொண்டது. தற்போது ஒரு புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் Toyota Glanza மற்றும் Maruti Suzuki Baleno ஆகிய இரண்டில் எதை வாங்கலாம் என்ற குழப்பத்தில் இருந்தால் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

டிசைன்:

Toyota Glanza-வின் முன்பகுதி பலேனோவை விட பெரிய மாற்றங்களை கொண்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கிரில் மற்ற டொயோட்டா கார்களை நினைவூட்டுகிறது. இது நடுவில் டொயோட்டா பேட்ஜை கொண்டுள்ளது. இதனிடையே புதிய Maruti Suzuki Baleno க்ரோம் சரவுண்ட்ஸ் கொண்ட ஒரு பரந்த கிரில்லை கொண்டுள்ளது. தவிர ஸ்பிலிட் டெயில் லைட்டுகளுக்கான நெக்ஸ்ட்ரீ எல்இடி சிக்னேச்சரையும் பலேனோ கொண்டுள்ளது. அதே போல புதிய Baleno-வுடன் ஒப்பிடுகையில் புதிய Glanza-வானது நேர்த்தியான ரேடியேட்டர் கிரில், ஸ்போர்ட்டியர் ஃப்ர்ன்ட் பம்பர், 16-இன்ச் அலாய் வீல்ஸ்களுக்கான வித்தியாசமான வடிவமைப்பு உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

கலர் ஆப்ஷன்கள்:

டொயாட்டோவின் புதிய Glanza காரானது இன்ஸ்டா ப்ளூ, என்ஹான்ஸிங் சில்வர், கஃபே வொயிட், கேமிங் கிரே மற்றும் ஸ்போர்ட்டின் ரெட் உள்ளிட்ட 5 காலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மறுபுறம், மாருதி சுசுகியின் புதிய Baleno நெக்ஸா ப்ளூ, ஸ்பிளெண்டிட் சில்வர், ஓபுலண்ட் ரெட், ஆர்க்டிக் ஒயிட், லக்ஸ் பீஜ் மற்றும் கிராண்டியர் கிரே உள்ளிட்ட 6 கலர் ஆப்ஷன்களில் வருகிறது.

வேரியன்ட்ஸ்:

முந்தைய Glanza 2 வேரியன்ட்களில் மட்டுமே கிடைத்தாலும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாடல் E, S, G மற்றும் V ஆகிய 4 வேரியன்ட்ஸ்களில் வருகிறது. 2022 மாருதி சுசுகி Baleno முன்பு போலவே சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்பா உள்ளிட்ட வேரியன்ட்ஸ்களில் வருகிறது.

உட்புறம் மற்றும் அம்சங்கள்:

2 நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளதால் 2 ஹேட்ச்பேக்குகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இன்டீரியர் லேஅவுட் மற்றும் அம்ச பட்டியலை கொண்டுள்ளன. இதில் 360 டிகிரி கேமரா, கனெக்டட் கார் டெக்னலாஜி, வாய்ஸ் அசிஸ்டன்ட், 9-இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் ஏசி, ஹெட்-அப் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்ஸ், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ரிவர்சிங் கேமரா போன்றவை அடக்கம். 2 கார்களுமே ஸ்டீயரிங் வீலுக்கான லோகோக்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான நிறுவனம் சார்ந்த குறிப்பிட்ட ஸ்டார்டிங் கிராபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன. ஆனால் முக்கிய வேறுபாடு என்னவென்றால் புதிய Glanza டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் டேஷ்போர்டை க்ளாஸ் பிளாக் இன்ஸெர்ட்ஸ்களுடன் (gloss black inserts) கொண்டுள்ளது. அதே நேரம் புதிய பலேனோ கிரே நிற இன்ஸெர்ட்ஸ்களுடன் நேவி ப்ளூ டேஷ்போர்டுடன் பிளாக் கலரை கொண்டுள்ளது.

Also read... வேகனார் முதல் ஸ்விஃப்ட் வரை - மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதிரடி தள்ளுபடிகள்

வாரன்ட்டி & விலை:

புதிய 2022 Glanza 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் வாரன்ட்டி பீரியடுடன் வருகிறது. Baleno 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வாரன்ட்டி பீரியடுடன் வருகிறது. இந்தியாவில் Glanza-வின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.39 லட்சம் முதல் ₹9.69 லட்சம் வரையிலும், புதிய Baleno-வின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.35 லட்சம் முதல் ரூ9.49 லட்சம் வரையிலும் உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Toyota Glanza

அடுத்த செய்தி