Hexa SUV XM+: அறிமுகமாகியது புதிய டாட்டா ஹெக்ஸா எக்ஸ் எம்+ !

news18
Updated: October 8, 2018, 6:04 PM IST
Hexa SUV XM+: அறிமுகமாகியது புதிய டாட்டா ஹெக்ஸா எக்ஸ் எம்+ !
டாட்டா ஹெக்ஸா எக்ஸ் எம் +
news18
Updated: October 8, 2018, 6:04 PM IST
டாட்டா ஆட்டோமொபைல் நிறுவனம் ஹெக்ஸா காரின் புதிய பிரிமியம் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாட்டா, எஸ்யூவி வகை காரான ஹெக்ஸாவை 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தக் கார் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்நிறுவனம் ஹெக்ஸா  எக்ஸ் எம்+  என்ற புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹெக்ஸாசில் 16 புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காரின் விலை ₹15.27 லட்சம்.

இந்த புதிய ஹெக்ஸா எக்ஸ் எம்+ காரில் 2 வருடம் வாரண்டியோடு கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. டாட்டா ஆரியாவை போல் தயாரிக்கப்பட்டிருக்கும் ஹெக்ஸா காரில் சஃபாரி ஸ்டார்மின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.


டாட்டா ஹெக்ஸாவின் இன்டிரியர்.


இந்த புதிய ஹெக்ஸா எக்ஸ் எம்+ காரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கேமிரா, குரூஸ் கண்டிரோல், ரெயின் சென்ஸிங் வைப்பர், தானாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் எக்ஸ்டிரீயர் மிரர்களும் உள்ளன. மேலும் ஆட்டோமெட்டிக் ஹெட்லாம்ப் ஆகியவையும் இந்த புதிய காரில் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரைப் பழைய ஹெக்ஸாவை போலவே முழுவதும் கருப்பு நிறமான ஸ்போர்டி இண்டிரியரே புதிய காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய காரில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான மாற்றங்களையும்(கஷ்டமைசேஷன்) டாட்டா நிறுவனமே செய்து தருகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம்.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...