• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • சுசுகியின் புத்தம் புதிய 125cc ஸ்கூட்டர் ரூ.86,700-க்கு அறிமுகம்

சுசுகியின் புத்தம் புதிய 125cc ஸ்கூட்டர் ரூ.86,700-க்கு அறிமுகம்

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

சுசுகியின் அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய 125சிசி ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது 125cc ஸ்கூட்டராக இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

  • Share this:
சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் சமீபத்தில் நாட்டில் புதிய 125சிசி ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 125சிசி ஸ்கூட்டரின் பெயர் சுசுகி அவெனிஸ் (Suzuki Avenis) ஆகும். புதிய Suzuki Avenis 125cc ஸ்கூட்டர் ஒரு ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் கனெக்டிவிட்டி ஃபியூச்சர்ஸ் மற்றும் பல கலர் ஆப்ஷன்களை கொண்டு வந்து உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சுசுகியின் அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய 125சிசி ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது 125cc ஸ்கூட்டராக இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய Suzuki Avenis 125cc ஸ்கூட்டர். புதிய Avenis 125cc ஸ்கூட்டரானது TVS நிறுவனத்தின் Ntorq மற்றும் Yamaha-வின் RayZR-க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டர் ரூ.86,700 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ (ரேஸ் எடிஷன்) எனப்படும் மோட்டோஜிபி இன்ஸ்பையர்ட் லைவரியையும் பெறும் என தெரிகிறது.

Suzuki Avenis-ன் டிசைன் கடந்த காலத்தில் நாம் பார்த்த பாதுகாப்பான மற்றும் எளிமையான ஸ்கூட்டர் டிசைன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஸ்கூட்டர் இளைஞர்களை இலக்காக கொண்டது. உதாரணமாக இதன் முன்புறத்தில் ஃபாக்ஸ் வென்ட்ஸ் (faux vents) மற்றும் சென்ட்ரலி மவுண்ட்டட் LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டு உள்ளது.

டர்ன் இன்டிகேட்டர்கள் ஹேண்டில்பார் கவ்லில் (handlebar cowl) வைக்கப்பட்டு ஹாலோஜன் பல்ப் யூனிட்ஸ்களை கொண்டுள்ளன. ஷார்ப் லுக்கிங் ஸ்கூட்டர் என்பதை தவிர, நல்ல செயல்திறனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று நிறுவனம் உறுதி அளிக்கிறது. புதிய Suzuki Avenis 125cc ஸ்கூட்டரானது எஃப்ஐ டெக்னலாஜியுடன் (FI technology) கூடிய 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை கொண்டு உள்ளது.

இந்த எஞ்சின் 6,750rpm-ல் 8.7hp பவரையும், 5,500rpm-ல் 10Nm டார்க்கையும் வழங்குகிறது. லைட் வெயிட் பாடி என்கிற வகையில் 106 கிலோ எடையை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொறுத்த வரை இந்த ஸ்கூட்டர் பின்வரும் அம்சங்களை அணுக யூஸர்கள் தங்கள் மொபைல் ஃபோனை ஸ்கூட்டரியுடன் சின்க் செய்ய சுசுகி ரைடு கனெக்ட் அப்ளிகேஷன் உடன் இணைந்து புளூடூத்-எனேபிள்டு டிஜிட்டல் கன்சோலுடன் வருகிறது.

இதன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் கால், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் அலர்ட் டிஸ்ப்ளே, மிஸ்ட் கால் மற்றும் அன்ரீட் எஸ்எம்எஸ் அலர்ட், ஸ்பீட் எக்ஸீடிங் வார்னிங், ஃபோன் பேட்டரி லெவல் டிஸ்பிளே மற்றும் எஸ்டிமேட்டட் டைம் ஆஃப் அரைவல் (estimated time of arrival) போன்ற அம்சங்களை பெற முடியும். டிசம்பர் நடுப்பகுதிக்கு பின் சுசுகி அவெனிஸின் ரீடெய்ல் விற்பனையை துவங்கப்பட உள்ளது. இந்த புத்தம் புதிய ஸ்கூட்டர் இந்தியா முழுவதும் ரேஸ் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ கலர் உட்பட 5 புதிய மற்றும் அற்புதமான கலர்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: