Royal Enfield: வாரே வா... அட்டகாசமான லுக்கில் வெளியாகியுள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கானது சாலையில் உள்ள மற்ற பைக்குகளிலிருந்து தனியாக தெரியும் என்பதால், வாகனத்தில் கூடுதல் மாடிபிகேஷன்களை செய்ய விரும்புகின்றனர்.

  • Share this:
இந்திய வாகன ஆர்வலர்களுக்கு பிடித்தமான இருசக்கர வாகனங்களில் ஒன்று ராயல் என்ஃபீல்டு பைக்குகள். இந்த பைக்குகள் இந்திய சாலைகளில் சிறப்பான ஸ்டைல் மற்றும் கிளாஸி லுக்கை கொடுப்பதில் ஒருபோதும் தவறியதில்லை. இந்த வாகனத்தின் ஒரிஜினல் வெர்சனை தவிர்த்து, RE ரசிகர்கள் தங்கள் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாகனத்திற்கு கஸ்டம் தயாரிப்பை பெற விரும்புகிறார்கள். இது சாலையில் உள்ள மற்ற பைக்குகளிலிருந்து தனியாக தெரியும் என்பதால், வாகனத்தில் கூடுதல் மாடிபிகேஷன்களை செய்ய விரும்புகின்றனர்.

சாலையில் போகும் போது தங்களது வாகனம் மற்றவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று யார் தான் விரும்பமாட்டார்கள்? அந்தவகையில் நீங்கள் கஸ்டம் RE வடிவமைப்பின் ஃபேன் என்றால், இன்டர்செப்டர் 650-ன் இந்த MIG-21 தயாரிப்பை தவறாமல் காண வேண்டும். பெங்களூரைச் சேர்ந்த "புல்லட்டர் கஸ்டம்ஸ்" இந்த கஸ்டம் இன்டர்செப்டர்650-க்கான மாற்றத்திற்கு MIG 21 ஃபைட்டர் ஜெட் வடிவமைப்பிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை, மாற்றியைடைமைக்கப்பட்டுள்ள வடிவமைப்பின் மூலம் நிச்சயம் வாகன ஆர்வலர்களின் பாராட்டுகளை பெறும்.

வடிவமைப்பாளர் இதில் மிக நுணுக்கமாக பணிபுரிந்திருப்பது நன்கு தெரிகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட இன்டர்செப்டர் 650 அதன் அசல் அமைப்போடு ஒன்றி இருப்பதைக் காணலாம். ஏர்பிரஷ்ட் ரிவெட்ஸ் டிசைனுடன் கூடிய பிரண்ட் ஃபாரிங் பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியையும் விண்டேஜ் உணர்வையும் சேர்க்கிறது. இது பார்ப்பதற்கு பழைய மற்றும் புதிய வடிவமைப்பு விவரங்களின் கலவையாக தெரிகிறது. அதிலும் இந்த வாகனத்திற்கு ஏற்றவாறு சாதுர்யமாக பயன்படுத்தப்பட்டுள்ள வண்ண கலவை மற்றும் பைக்கில் உள்ள MIG 21 வடிவமைப்பு லேபிள்கள் ஆகியவை மக்களை திரும்பிப்பார்க்க வைக்கும் விதத்தில் உள்ளது.

இராணுவ பச்சை வண்ணம் கொண்ட எரிபொருள் தொட்டி 'IND' என்ற லேபிளுடன் கிடைக்கிறது. இந்த கஸ்டம் மோட்டார் சைக்கிள் MIG-21 ஃபைட்டர் ஜெட் வடிவமைப்பு மற்றும் பொறியியலின் சாராம்சத்தைப் தக்க வைத்துள்ளது. புதிய மற்றும் பழைய பாணியை சரியான கலவையுடன் வழங்குகிறது. இதனை வடிவமைத்தவர்கள் இயந்திரத்தின் எஞ்சினில் எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை. மேலும் இது அசல் 650 சிசி ஏர்/ ஆயில்-கூல்டு எஞ்சினுடன் வருகிறது. இது அதிகபட்சமாக 47 ஹெச்பி ஆற்றலையும் 52 என்எம் அதிகபட்ச டார்க் சக்தியையும் உருவாக்குகிறது.

AlsoRead :கஸ்டம் ராப் மற்றும் பாடி கிட்டுடன் புதிய தோற்றத்தில் விற்பனைக்கு வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

பைக்கிற்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்க அசல் எக்ஸாஸ்ட் புதிய ஜோடியுடன் மாற்றப்பட்டுள்ளன. சக்கர அமைப்பைப் பொறுத்தவரை, புல்லட்டர் கஸ்டம்ஸ் அசல் 18 அங்குல வயர்-ஸ்போக் அலகுக்குப் பதிலாக 17 அங்குல உலோகக் கலவைகளை அப்பல்லோ டையர்களுடன் மாற்றியுள்ளது. பைக்கின் இந்த அமைப்பை மணிக்கு 180 கிமீ வேகத்தில் சோதித்ததாகவும், அது மிகவும் நிலையாக இருக்கிறது என்றும் வாகனத்தை மாற்றியமைத்துள்ள குழுவினர் கூறுகின்றனர். இன்டர்செப்டரின் மாற்றியமைக்கப்பட்ட வெர்சனுக்கு ஃபியர்லெஸ் 650 என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: