ஸ்டன்னிங் லுக்குடன் இந்தியாவில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்டு 'Himalayan': இதன் ஆரம்ப விலை தெரியுமா?

ஹிமாலயன் ஒரு உண்மையான உலகளாவிய மோட்டார் சைக்கிள் என்று வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் பல பகுதிகளில் ராயல் என்ஃபீல்டில் மிகவும் விரும்பப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஹிமாலயனும் ஒன்றாகும்.

ஹிமாலயன் ஒரு உண்மையான உலகளாவிய மோட்டார் சைக்கிள் என்று வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் பல பகுதிகளில் ராயல் என்ஃபீல்டில் மிகவும் விரும்பப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஹிமாலயனும் ஒன்றாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மூன்று நாடுகளில் இன்று ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் மோட்டார் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கசிந்த தகவல்களை போல ஹிமாலயன் மூன்று புதிய தனித்துவமான வண்ண விருப்பங்களுடன், பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.  தற்போது பயன்பாட்டில் உள்ள ராக் ரெட், லேக் ப்ளூ மற்றும் கிராவல் கிரே ஆகிய வண்ண விருப்பங்களுடன், இந்த சாகச-சுற்றுப்பயண மோட்டார் பைக் இப்போது நியூ கிரானைட் பிளாக், மிராஜ் சில்வர், பைன் கிரீன் என கூடுதல் வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. 

இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்ட் கடைகளிலும் முன்பதிவு மற்றும் டெஸ்ட் ட்ரிவிங்கிற்கு கிடைக்கிறது. மேலும் இதன் ஆரம்பவிலை ரூ.2,01,314 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், ஹிமாலயன் இப்போது மேக் இட் யுவர்ஸ் (MiY) முன்முயற்சியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் பைக்கை RE ஆப், வலைத்தளம் மற்றும் டீலர்ஷிப்கள் என அனைத்து சேனல்களிலும் தனிப்பயனாக்கவும் மற்றும் அதனை அணுகவும் அனுமதிக்கிறது. மேலும், இந்த பைக் டிரிப்பர் நேவிகேஷன் அம்சத்துடன் வருகிறது. 

இதன் மூலம், வாகன ஓட்டிகள் தங்களது ஸ்மார்ட்போனை புளூடூத் மூலம் இணைத்து டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் விருப்பத்தை பெற முடியும். புதிய மாடலில் இருக்கை, பின்புற கேரியர், முன் ரேக் மற்றும் புதிய விண்ட்ஸ்கிரீன் ஆகியவற்றில் பல மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. புதிய ஹிமாலயன் பைக்கின் அறிமுகம் குறித்தும், அதன் உருவாக்க பயணம் குறித்தும் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கே தசரி , “வெறும் 5 ஆண்டு குறுகிய கால இடைவெளியில், ராயல் என்ஃபீல்டு  ஹிமாலயன் உலகளாவிய சாகச சுற்றுப்பயணத்திற்குள் அதன் புதிய வகையை வெளியிட்டுள்ளது. 

ஹிமாலயன் ஒரு உண்மையான உலகளாவிய மோட்டார் சைக்கிள் என்று வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் பல பகுதிகளில் ராயல் என்ஃபீல்டில் மிகவும் விரும்பப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஹிமாலயனும் ஒன்றாகும். முதலில் உருவாக்கப்பட்ட 2016 ஹிமாலயன் ஒரு வகையாக இருந்தது.

மேலும் அது மிகவும் பல்துறை மற்றும் அணுகக்கூடிய மோட்டார் சைக்கிள் ஆகும். பல ஆண்டுகளாக, எங்கள் ரைடிங் சமூகத்தின் பின்னூட்டங்களுடன், வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஹிமாலயனை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி, ஒட்டுமொத்த சவாரி அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான சாகச ஆர்வலர்களுடன் இது மிகவும் சிறப்பாக எதிரொலித்தது. இப்போது புதிய வகைகளைத் தேர்வு செய்ய வைத்துள்ளது. இன்றைய வெளியீட்டுடன், உலகெங்கிலும் உள்ள சாகச சுற்றுப்பயண இடத்தை மேலும் தூண்டிவிடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். ” எனக் கூறியுள்ளார். இந்த புதிய ஹிமாலயன் அதன் அசல் வடிவமைப்பைத் அப்படியே தக்க வைத்துள்ளது. அதில், கூடுதல் அம்சமாக டிரிப்பர் எனப்படும் ரியல்-டைம் டிரெக்சன்களுக்கான மையப்படுத்தப்பட்ட நேவிகேஷன் டிஸ்பிலே டிவைஸை சேர்த்துள்ளது. இது கூகிள் மேப்ஸ் இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Also read... மஹிந்திரா தார் மாடல் காருக்கு தாறுமாறு புக்கிங் - உற்பத்தியை அதிகப்படுத்திய மஹிந்திரா!

ராயல் என்ஃபீல்ட் ஆப் வழியாக ரைடரின் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஹிமாலயனில் மேம்பட்ட இருக்கை குஷனிங்குடன் வருகிறது. மேலும் அதன் பின்புற கேரியர் இப்போது கூடுதல் பிளேட்களுடன் வந்துள்ளது. இதன் மூலம், எந்தவொரு சாமானையும் பாதுகாப்பாக கட்டி எடுத்துச் செல்வதை உறுதி செய்ய முடியும்.  கூடுதலாக, பின்புற கேரியர் இப்போது உயரத்திலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை ஏற்றுவது எளிதானது. ஹிமாலயன் புதிய மற்றும் மெலிந்த பணிச்சூழலியல் ரீதியாக சரிசெய்யப்பட்ட முன் ரேக்கையும் பெற்றுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: