விழாக்கால சலுகை, புதிய மாடல்கள் அறிமுகத்தால் மீண்டது இந்திய ஆட்டோமொபைல் துறை..!

யூவி ரக வாகன விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 22.22 சதவித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

விழாக்கால சலுகை, புதிய மாடல்கள் அறிமுகத்தால் மீண்டது இந்திய ஆட்டோமொபைல் துறை..!
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: November 12, 2019, 7:15 PM IST
  • Share this:
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை சற்றே மீண்டுள்ளது என்றே கூறப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் விழாக்கால சலுகை, கார் உற்பத்தி நிறுவனங்களின் புதிய மாடல் கார்கள் அறிமுகம் ஆகியவற்றால் கார் விற்பனைத் துறை திடீர் வளர்ச்சிக் கண்டது.

“11 மாத வீழ்ச்சியிலிருந்து அக்டோபர் மாத விற்பனை ஆட்டோமொபைல் துறையை மீட்டுள்ளது. பாசெஞ்சர் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ஆனால், அக்டோபரில் உள்நாட்டு வாகன விற்பனை 6.34 சதவித வீழ்ச்சியைக் கண்டுள்ளது. யூவி ரக வாகன விற்பனையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 22.22 சதவித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனையும் கடந்த ஆண்டு அக்டோபரைவிட இந்த ஆண்டு அக்டோபரில் 14.43 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் பார்க்க: அக்டோபர் மாத விற்பனையில் முதலிடத்தில் ஹூண்டாய் - டாப் கார் எது..?
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading