ஆஃப் ரோடில் ஆதிக்கம் செலுத்த புதிய ஜி 63 ஏஎம்ஜி மெர்சிடீஸ் பென்ஸ்

news18
Updated: October 5, 2018, 10:17 PM IST
ஆஃப் ரோடில் ஆதிக்கம் செலுத்த புதிய ஜி 63 ஏஎம்ஜி மெர்சிடீஸ் பென்ஸ்
மெர்சடீஸ் பென்ஸ்
news18
Updated: October 5, 2018, 10:17 PM IST
மெர்சிடீஸ் பென்ஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் ஜி 63 ஏஎம்ஜி எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜி 63 ஏஎம்ஜி என்ற எஸ்யூவி வகை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இதன் விலை ₹2.19 கோடி ரூபாய். 4.0 லிட்டர் வி8 பைடர்போ இன்ஜினுடன் வெளிவந்துள்ள இந்த கார், 585 சக்தியும், 850 என்எம் திறனும் கொண்டது. இந்த காரில் 9 கியர்கள் உள்ள ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கேபினும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் மைக்கல் ஜாப், ``பாறைகளில் ஏறும் திறன், ஸ்போர்ட்ஸ் பெர்பாமன்ஸ், முன்னணி ஸ்டைல் மற்றும் ஹைடெக்கான கேபின் ஆகியவை இந்த காருக்கு சிறப்பு சேர்த்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த கார் 2018-ம் ஆண்டு மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 10-வது புதிய காராகும். ஜி 63 ஏஎம்ஜி கார் 4.5 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும் சக்திகொண்டது. ஆஃப் ரோட் பயணத்துக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்டது.
First published: October 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...