Home /News /automobile /

சன்ரூஃப் & வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் அம்சங்களுடன் வரவிருக்கும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா

சன்ரூஃப் & வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் அம்சங்களுடன் வரவிருக்கும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா

விட்டாரா பிரெஸ்ஸா

விட்டாரா பிரெஸ்ஸா

சமீபத்திய ஆண்டுகளில் போட்டி தீவிரமடைந்துள்ள காரணத்தால் 2022-ன் தொடக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸாவின் அப்டேட்டட் செய்யப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.

ஃபேஸ்லிஃப்ட்டட் பலேனோ (facelifted Baleno), இரண்டாம் தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா (second-gen Vitara Brezza), மூன்றாம் தலைமுறை ஆல்டோ ( third-gen Alto), அப்டேட் செய்யப்பட்ட எர்டிகா (Ertiga) மற்றும் XL6 உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வரும் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், பிராண்ட் டொயோட்டாவுடன் இணைந்து ஒரு மிட்சைஸ் SUV மற்றும் ஒரு காம்பேக்ட் SUV மற்றும் 7 சீட்டர் காரை உருவாக்குகிறது. மாருதி சுசுகி சமீபத்தில் அதன் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் SUV-யின் 7 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை தாண்டியது. ஹூண்டாய் வென்யூவிற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் சமீபத்தில் வந்த இந்த கார் விற்பனை தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகிறது

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் போட்டி தீவிரமடைந்துள்ள காரணத்தால் 2022-ன் தொடக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸாவின் அப்டேட்டட் செய்யப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. சில வாரங்களுக்கு முன் மாருதி சுசுகி பிரெஸ்ஸா 2022 தயாரிப்பு மாடல் அதன் இறுதி வடிவத்தில் YTA என்ற கோட் பெயரில் லீக்கானது. இதன் உள்ளேயும் வெளியேயும் பல மாற்றங்களுடன் கூடுதலாக, இது அதே குளோபல் சி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டது. மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விஷுவல் மாற்றங்கள் மற்றும் முற்றிலும் ரீடிசைன் செய்யப்பட்ட இன்டீரியருடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

வரவிருக்கும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா காரில் முன்பக்க பம்பர் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் கிரில் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபாக் லேம்ப்ஸ் (fog lamps) திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் புதிய டெயில் லேம்ப்ஸ்கள் ரேப்பரவுண்டுக்கு (wraparound) பதிலாக கொடுக்கப்பட்டுள்ளன. தவிர டெயில்கேட் (tailgate) மற்றும் ரியர் பம்பர் (rear bumper) ரீடிசைன் செய்யப்பட்டுள்ளன. ப்ரெஸ்ஸா என்ற வார்த்தை பூட்லிடில் (bootlid) எழுதப்பட்டுள்ளன. ஆப்ஷனல் ஹை-மவுண்ட்டட் ஸ்டாப் லேம்ப்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன் மற்றும் பின்புறம் ஸ்கிட் பிளேட்ஸ் ( skid plates) சேர்ப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் ஆட்டோமேட்டிக் மாடல்களில் paddle shifts தவிர, eSIM கனெக்டிவிட்டி வயர்லெஸ் ஃபோன் சார்ஜ் ஸ்டேஷன் மற்றும் சன்ரூஃப் போன்ற பல புதிய அம்சங்களையும் அனுமதிக்கும் என தெரிகிறது.

ALSO READ |  உங்கள் மொபைலை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் 5 டிப்ஸ்கள்..!

வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் புதிய டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலை பெறுவதால், அதன் வெளிப்புறம் பிரீமியம் பொருட்களை பயன்படுத்தி ரீஸ்டைல் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்விஃப்ட் அடிப்படையிலான புதிய ஸ்டீயரிங் வீல், அப்டேட்டட் எம்ஐடி-யுடன் மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. இதன் செயல்திறனைப் பொறுத்தவரை, அதே 1.5-லிட்டர் K18 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டு உள்ளது. இது 105 PS பவர் மற்றும் 138 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Maruti Suzuki

அடுத்த செய்தி