புதிய மஹிந்திரா தார் கார் டெலிவரிகள் நவம்பர் முதல் தொடக்கம்..!

Mahindra Thar | 3,750 rpm வேகத்தில் 130 bhp ஆற்றலையும், 1,600-2,800 rpm இடையே 300 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது.

புதிய மஹிந்திரா தார் கார் டெலிவரிகள் நவம்பர் முதல் தொடக்கம்..!
மாதிரி படம்
  • Share this:
கார்கள் என்றால் பலருக்கும் தனி பிரியம் தான், அதிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சத்துடன் கார்கள் சந்தைக்கு வந்தால் அதற்கு அட்டகாசமான ஆதரவு கிடைக்கும் என்பதற்கு மஹிந்திரா தாரின் சமீபத்திய வெளியீடே காரணம். நவம்பர் 1 முதல் வாகன விநியோகம் தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனத்தின் ஆரம்ப விலை ரூ.9.80 லட்சம் மற்றும் இது AX Series (AX மற்றும் AX ஆப்ட்) மற்றும் LX சீரிஸ் - LX மேனுவல் டிரான்ஸ்மிஷன் & LX ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போன்ற சீரிஸ்களை கொண்டுள்ளது.

AX சீரிஸை ஆறு இருக்கைகள் அல்லது நான்கு இருக்கைகள் கொண்ட அமைப்பில் சாப்ட் டாப், கான்வெர்டிபிள் டாப் மற்றும் ஹார்ட் டாப் விருப்பங்களுடன் வாங்கலாம். அனைத்து புதிய மஹிந்திரா தார் ஆறு வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதில் ராக்கி பீஜ், அக்வாமரைன், மிஸ்டிக் காப்பர், ரெட் ரேஜ், நெப்போலி பிளாக் மற்றும் கேலக்ஸி கிரே ஆகியவை அடங்கும். இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நிறுவனம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

Carwaleனால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, மொத்த முன்பதிவுகளில், 57 சதவீதம் முதல் முறையாக ஒரு கார் வாங்கும் நபர்களால் மேற்கொள்ளபட்டது என தகவல் அளித்துள்ளது. காரின் தானியங்கி மாறுபாட்டிற்காக ஏராளமான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட புதிய மஹிந்திரா தார் தற்போதைய காத்திருப்பு நேரம் நான்கு முதல் 22 வாரங்களுக்கு இடையில் உள்ளது.


தானியங்கி டீசல் டிரிம்களில் நீண்ட காத்திருப்பு காலம் எதிர்பார்க்கப்படுகிறது. சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் விருப்பங்களுக்கு இடையே வாங்குவோர் வாங்கலாம். டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் mHawk 130 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 3,750 rpm வேகத்தில் 130 bhp ஆற்றலையும், 1,600-2,800 rpm இடையே 300 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது.

அனைத்து வகைகளிலும் இந்த வாகனம் நான்கு சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் உயர் மற்றும் குறைந்த ரீடேக்சன் கியருடன் வருகிறது. வாகனத்தைப் பொருத்தவரை, இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 150 TGDi பெட்ரோல் எஞ்சின் 5,000 rpm மணிக்கு 150 bhp மற்றும் 1,250-3,000 rpm இடையே 300 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது, தானியங்கி விருப்பம் 1,500 - 3,000 rpm இடையே 320 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.

சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் விருப்பங்களுக்கு இடையே வாங்குவோர் வாங்கலாம். டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் mHawk 130 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 3,750 rpm வேகத்தில் 130 bhp ஆற்றலையும், 1,600-2,800 rpm இடையே 300 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. அனைத்து வகைகளிலும் இந்த வாகனம் நான்கு சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் உயர் மற்றும் குறைந்த ரீடேக்சன் கியருடன் வருகிறது. 
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading