அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் 2020-ல் வெளியாகும் புதிய மஹிந்திரா பொலிரோ+

கூடுதலாக BS-VI அங்கீகார சான்றிதழ் பெற்ற முதல் யூவி காராகவும் பொலிரோ+ உள்ளது.

அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் 2020-ல் வெளியாகும் புதிய மஹிந்திரா பொலிரோ+
மஹிந்திரா பொலிரோ
  • News18
  • Last Updated: July 29, 2019, 11:10 AM IST
  • Share this:
புதிய மஹிந்திரா பொலிரோ+ வருகிற 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் வாகனப் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு மஹிந்திரா பொலிரோ+ வெளியாக உள்ளது. BS-VI வெர்ஷனாக வெளியாக உள்ள மஹிந்திரா பொலிரோ+ பல தொழில்நுட்ப அப்டேட்களை பாதுகாப்பு ரீதியாகப் பெற்றுள்ளது.

இதுகுறித்து மஹிந்திராவின் வாகனப் பிரிவின் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், “BS-VI வெர்ஷன் கார்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக மஹிந்திரா பொலிரோ+ இருக்கும். எங்களது எஸ்யூவி தயாரிப்புகளிலேயே அதிக விற்பனையைப் பெற்ற காராக பொலிரோ உள்ளது. கூடுதலாக BS-VI அங்கீகார சான்றிதழ் பெற்ற முதல் யூவி காராகவும் பொலிரோ+ உள்ளது” என்றார்.


ஏர்பேக், ஏபிஸ், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், வேகக்கட்டுப்பாடு லாக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் என 2019 மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு!
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading