ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகமாகிறது ஹோண்டா அமேஸ் வாகனம்: ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

ஹோண்டா அமேஸ்

தற்போது ஹோண்டாவின் 2வது தலைமுறையில், ஹோண்டா அமேஸ், மிகப்பெரிய விற்பனை மாடலாக விளங்குகிறது.

  • Share this:
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) புதிய ஹோண்டா அமேஸ் வாகனத்தை இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அன்று அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் இந்த வாகனத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்களிலும் ரூ .21,000 கொடுத்து முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, வாடிக்கையாளர்கள் 'ஹோண்டா ஃப்ரம் ஹோம்' என்ற HCIL இணையதளத்தில் வெறும் ரூ. 5,000 செலுத்தி ஆன்லைனில் காரை முன்பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜப்பானிய கார் பிராண்டான ஹோண்டா ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து பிரபலமான காம்பாக்ட் செடான் ஹோண்டா அமேஸின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்-ன், மார்க்கெட்டிங் & சேல்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் இயக்குனருமான திரு ராஜேஷ் கோயல் புதிய அமேஸ் வாகனத்தின் அறிமுகம் பற்றி பேசுகையில், "2013-ல் அறிமுகமானதில் இருந்து, ஹோண்டா அமேஸ் 4.5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாடிக்கையாளர்கள் வாகனத்தை இந்தியாவின் மிகவும் விருப்பமான குடும்ப செடான்களில் ஒன்றாக மாற்றியுள்ளனர். இந்த மாத இறுதியில் புதிய அமேஸ் வாகனத்தின் அறிமுகத்தின் மூலம் மாடலின் வெற்றி கதையில் மற்றொரு அத்தியாயத்தைச் சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய அமேஸ் இன்னும் அதிக பிறீமியத்துடன், ஸ்டைலான மற்றும் அதிநவீனமான அம்சங்களுடன் வருகிறது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட வாகன மாடலுடன் வாடிக்கையாளர்களை அணுக இருக்கிறோம். இது சந்தையில் புதிய உற்சாகத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

Also read... இந்தியாவில் அறிமுகமானது BMW இண்டிவிஜுவல் 740Li M ஸ்போர்ட் எடிஷன்: விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது ஹோண்டாவின் 2வது தலைமுறையில், ஹோண்டா அமேஸ், மிகப்பெரிய விற்பனை மாடலாக விளங்குகிறது. மேலும் இந்தியாவில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் விருப்பங்களை மனதில் வைத்து இந்த மாடல் கருத்துருவாக்கப்பட்டது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சமகால மற்றும் பிரீமியம் மாடல் அதன் நேர்த்தியான வடிவமைப்பு, அதிநவீன மற்றும் விசாலமான உட்புறங்கள், சிறந்த ஓட்டுநர் செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் செடான் அனுபவத்திற்கு மேலும் கூடுதல் கிளாஸ் உணர்வைக் கொடுக்கும்.

ஹோண்டா அமேஸ் 1.5L i-DTEC டீசல் எஞ்சின் மற்றும் 1.2L i-VTEC பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டு எரிபொருள் விருப்பங்களிலும், மேனுவல் மற்றும் CVT வெர்சன்களிலும் கிடைக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் சில தொழிற்நுட்ப வசதிகள் அப்கிரேடும், திருத்தப்பட்ட ஸ்டைலும், புதிய பெயிண்ட் தேர்வுகளையும் தயாரிப்பு நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: