• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி சுசூகியின் ஜனவரி ஆஃபர் - எந்தெந்த கார்களுக்கு என்னென்ன ஆஃபர் தெரியுமா?

மாருதி சுசூகியின் ஜனவரி ஆஃபர் - எந்தெந்த கார்களுக்கு என்னென்ன ஆஃபர் தெரியுமா?

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் சில கார்களுக்கு கூடுதலான ஆஃபர்களை வழங்கியுள்ளது. புதிய ஆஃபர்கள் ஜனவரி மாதத்துக்கு மட்டுமே பொருந்தும்.

  • Share this:
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களாக உள்ள மகேந்திரா, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள், உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தைக் கருதில் கொண்டு, தங்களின் நிறுவன தயாரிப்பு கார்களின் விலையையும் கணிசமாக உயர்த்தினர். அதேவேளையில் புத்தாண்டு விற்பனையை அதிகரிக்க சில சலுகைகளையும் அறிவித்துள்ளனர். தற்போது மேலும் சில கார்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் கூடுதலாக கார்ப்பரேட் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேன்ஞ் போனஸ், பணச்சலுகை உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ஜனவரி மாதத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

மாருதி ஆல்டோ:

மாருதி ஆல்டோ, நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இருக்கும் பொதுவான கார்களில் ஒன்று. நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த கார்களுக்கு புத்தாண்டு தள்ளுபடிகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹேட்ச்பேக்  (hatchback) ரூ .15,000 ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்ஸ்சேன்ஞ் போனஸ் 15,000 ரூபாய் வரையிலும், கார்பரேட் போனஸ் அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது.  இந்த மாடலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  18,140 கார்கள் விற்பனையாகி, விற்பனை சந்தையில் முதல் இடத்தை பிடித்தது.

 

மாருதி எஸ் பிரெஸ்சோ:

கார் வாங்க நினைப்பவர்கள், மாருதி எஸ் பிரெஸ்சோ பிராண்டு காரை தேர்தெடுத்தால் பண டிஸ்கவுண்ட் 20 ஆயிரம் ரூபாயும், எக்ஸ்சேன்ஞ் போனஸாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்ப்படுகிறது. அதனுடன், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த மாடல் மைக்ரோ எஸ்.யூ.வி கார் 2019ம் ஆண்டு மாருதி நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. மாருதி ஆல்டோ மாடலுக்கு அடுத்தப்படியாக மாருதி எஸ்.பிரஸ்சோ கார்களும் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இந்த மாடலின் கார் விற்பனையும் அதிகரித்துள்ளது.

 

மாருதி எர்டிகா :

மாருதி எர்டிகா மாடல் விற்பனையும் கடந்த ஆண்டில் 90 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வகை மாடல் கார்களுக்கு குறிப்பிட்ட சில தள்ளுபடிகளை மட்டுமே மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவும், டீலருக்கு டீலர் வேறுபடுகிறது. கார்ப்பரேட் தள்ளுபடி 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டாலும், அந்த சலுகை கார்களின் மாடலை பொறுத்து மாறுபடும் என கூறியுள்ளது. பணச் சலுகை மற்றும் எக்ஸ்சேன்ஞ் போன்ஸ் ( exchange bonus) இல்லை. எர்டிகா எம்.பி.வி கார்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாருதி டிசைர் :

Maruti Dzire-க்கு 8 ஆயிரம் ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. தேர்தெடுக்கப்பட்ட சில கார்களுக்கு மட்டும் 4 ஆயிரம் ரூபாய் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேன்ஞ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த கார்கள் 7 வேரியண்டுகளில் 6 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் 13 ஆயிரத்துக்கும் மேலான யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

மாருதி ஈகோ:

மாருதி ஈகோ வேனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை காஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. கார்ப்பரேட் வாகன தள்ளுபடியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. 3 வகையான வேரியண்டுகளில் கிடைக்கும் இந்த வேன்கள் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 4.80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்டேட் எஞ்சின் வெர்சன், 5 ஸ்பீடு மேனுவல் உள்ளிட்ட ஆப்சன்களிலும் இந்த கார்கள் கிடைக்கின்றன. 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராண்டு கார்கள் தற்போது வரை 6 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகியுள்ளது.

மாருதி ஸ்விப்ட்:

இந்தியாவில் மிகவும் பிரபலமான செடான் கார்களில் ஒன்று மாருதி ஸ்விப்ட் ஆகும். இந்த வாகனம் தற்போது மூன்றாவது Generation-ல் உள்ளது. ஆகாஷ் திட்ட சலுகை 10 ஆயிரம் ரூபாயும், கார்ப்பரேட் சலுகை 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேன்ஸ் போனஸ் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 5 வேரியண்டுகளிலும், டீசலில் வேரியண்டுகளிலும் கிடைக்கிறது. இதேபோல், மாருதி சேலெரியோ காஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா :

மாருதி விட்டாரா ப்ரெஸா 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2020ம் ஆண்டில் பிஎஸ் 6-compliant பெட்ரோல் எஞ்சினாக மாற்றப்பட்டது. விட்டாரா ப்ரெஸா மாடல் கார்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடியும், 20 ஆயிர்ம ரூபாய் எக்ஸ்சேன்ஸ் போனஸூம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  இந்த மாடலின் அடுத்த வெர்சன் 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாருதி வேகன்-ஆர்:

மிகவும் பிரபலமான கார்களிலும் இந்த மாடல் காரும் ஒன்று. மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் கார்களில் இதற்கு முக்கிய இடமுண்டு. புத்தாண்டு தள்ளுபடியில் 8 ஆயிரம் ரூபாய் பண தள்ளுபடி வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேன்ஸ் போனஸ் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: