ஹுண்டாய், மாருதி கார்கள்: ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு!

ஹுண்டாய், மாருதி கார்கள்: ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு!
ஹுண்டாய் ஐ 10
  • News18
  • Last Updated: July 7, 2018, 5:24 PM IST
  • Share this:
பண்டிகை காலம் என்றாலே ‘ஃபெஸ்டிவல் ஆஃபர்’ என்ற பெயரில் வீட்டு உபபோயகப் பொருட்களிலிருந்து கார், பைக் வரை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான ‘மெகா டிஸ்கவுண்ட்’களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

ஆட்டோமொபைல் சந்தையைப் பொருத்தவரை, பண்டிகை நாட்களில் கார்கள் அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் ஏற்கெனவே சந்தையில் உள்ள கார்களின் அப்டேட் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களத்தில் இறக்கும். இதனால் கார்களின் பழைய மாடல்களின் விற்பனையில் மந்தம் ஏற்படும். இதனை சமாளிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஜூலை மாதத்துக்கான ஆஃபர்களை அறிவித்துள்ளன. இதன்மூலம் ரூ. ஒரு லட்சம் வரை தள்ளுபடி விலையில் கார்களை வாங்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ-10


1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி

புதிய மாருதி ஸ்விஃப்டின் வருகையால் சந்தையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள ஹூண்டாய் ஐ-10 காரை, 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாயின் மற்றொரு காரான ஆக்ஸண்ட்டுக்கும் 1 லட்சம் தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

மாருதி சுஸுகி சியஸ்
75000 ரூபாய் வரை தள்ளுபடி

ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்ட பின்பு, மாருதி சுஸுகி சியஸின் விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. சியாஸின் புதிய மாடல் வரவிருப்பதால் பழைய மாடல்களை கழித்து கட்ட 75,000 ரூபாய் தள்ளுபடியில் சியாஸ் காரை, மாருதி நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

ஹோண்டா ஜாஸ்
60,000 ரூபாய் வரை தள்ளுபடி

ஹோண்டா எலைட் ஐ 20 மற்றும் மாருதி சுஸுகி பாலேனோ கார்கள் சந்தையில் வந்த பிறகு ஹோண்டா ஜாஸ் விற்பனையில் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதனால், இப்போது 60,000 ரூபாய் தள்ளுபடியில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா ஜாஸ்.

மஹிந்திரா எக்ஸ் யு வி 500
1.5 லட்சம்  ரூபாய் வரை தள்ளுபடி

மஹிந்திரா எக்ஸ் யு வி 500 விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. 20 லட்சம் ரூபாய்க்குள் உள்ள எஸ். யு. வி. வகை கார்களிலேயே பிரீமியம் வகை எஸ். யு. வி. யான இந்த கார், இப்போது 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடியுடன் வருகிறது. எக்ஸ் யு வியின் புதிய மாடல் வருவதால் இந்த முடிவை மஹிந்த்ரா நிறுவனம் எடுத்துள்ளது.

மாருதி சுஸுகி வாகேனோர்
40,000 ரூபாய் வரை தள்ளுபடி

டாப் செல்லிங் கார்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுவரும் மாருதி வாகேனோர் இப்போது 40,000 ரூபாய் தள்ளுபடியில் சில டீலர்களால் விற்பனை செய்யப்படுகிறது. சிட்டி டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு சிறந்த காரான வாகேனோர் வாடிக்கையாளர்களின் ஃபேவரைட்டாக தொடர்ந்து வருகிறது.

ஹோண்டா சி ஆர் வி
1.5 லட்சம் ரூபாய் வரை  தள்ளுபடி

பிரீமியம் வகை எஸ்.யு.வி.-ஆன ஹோண்டா சி.ஆர்.வி. 1.5 லட்ச ரூபாய் தள்ளுபடி விலையில் வருகிறது. சந்தையில் நன்றாக விற்பனையாகி வந்த ஹோண்டா சி ஆர் வி சமீப காலங்களில் அதிகம் விற்பனை ஆகவில்லை என்பதே இந்த தள்ளுபடிக்கு காரணம்.
First published: July 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...