உலகில் உள்ள பைக் பரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டுவது என்பது அவர்களது வாழ்நாள் விருப்பம் என்று சொன்னால் மிகையில்லை. அந்த அளவிற்கு ஸ்டைல், வேகம், கம்பீரம் என ஹார்லி எப்போதுமே தனித்துவமாக திகழும். மிகவும் விலை உயர்ந்த பைக் என்பதால் வெகுஜன தயாரிப்பாக இது இல்லை. ஆனால் அந்தக் குறையைப் போக்குவதற்காகவும் இந்திய பைக் பிரியர்களை வெகுவாக கவரும் நோக்கிலும் விலை குறைந்த பட்ஜெட் பைக்குகளை தயாரிக்க முன்வந்துள்ளது ஹார்லிடேவிட்சன் நிறுவனம்.
இதற்காக, அமெரிக்க நிறுவனமான ஹார்லி இந்தியாவில் ஹீரோ மோட்டார் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இந்த ஆண்டு ஹார்லி டேவிட்சன் X350 என்ற பெயரில் பட்ஜெட் விலை பைக்குகளை சந்தைப்படுத்த உள்ளது. அசத்தலான தோற்றத்தில் இந்த பைக்குகள் தயாராகி வருகின்றன. 350 சிசி திறன் கொண்ட 47 bhp சக்தியை வெளிப்படுத்தக் கூடிய இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 207 எடை கொண்ட இந்த பைக் மணிக்கு அதிகபட்சமக 143 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. முன் சக்கரம் பின் சக்கரம இரண்டிலுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் வீல்களுடன் நான்கு வண்ணங்களில் ஹார்லி டேவிட்சன் X350 பைக் கிடைக்கும்.
பேபி ஹார்லி என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படும் இந்த பைக்கின் விலை 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹார்லி டேவிட்சன் X350 பைக் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போல் சீனாவின் குயான்ஜியாங் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ஆசிய நாடுகளில் சந்தைப்படுத்துவதற்காக 500 சிசி திறன் கொண்ட சிறிய ரக பைக்குகளை தயாரிக்கவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய, பட்ஜெட் விலை பைக்குகள் கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'பேபி ஹார்லி' தொடர்பான விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், புதிய பைக்கிற்கான டீலர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையாக புதிதாக வெளிவர உள்ள பைக் தொடர்பான விபரங்களை அமெரிக்காவின் சாலைப் போக்குவரத்து முகமையிடம் ஹார்லி நிறுவனம் அளித்திருந்தது. இதையடுத்து பேபி ஹார்லி தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. புதிய பேபி ஹார்லி எப்போது ஷோ ருமிற்கு வரும் என இப்போதே இந்திய பைக் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க தொடங்கியுள்ளனர். வரும் நவம்பர் மாதம் முதல் பேபி ஹார்லி இந்திய சாலைகளில் கலக்கலாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Budget friendly, India