• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பல்வேறு சிறப்பம்சங்களுடன் மாஸாக வருகிறது பஜாஜ் பல்சர் 250 - டீசர் வெளியீடு!

பல்வேறு சிறப்பம்சங்களுடன் மாஸாக வருகிறது பஜாஜ் பல்சர் 250 - டீசர் வெளியீடு!

பஜாஜ் பல்சர் 250

பஜாஜ் பல்சர் 250

அழகாகவும், கெத்தாகவும் பைக் இருக்கிறது. டீசரிலும் அக்டோபர் 28ம் தேதி பைக் அறிமுகமாகிறது.

  • Share this:
அக்டோபர் 28ம் தேதி அறிமுகப்படுத்த உள்ள பல்சர் 250 பைக்கின் டீசரை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மாடல். இந்த மாடலில் புதிய வெர்சனை அக்டோபர் 28ம் தேதி அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. பல்சர் 250 என கூறியுள்ள பஜாஜ், அதற்கான டீசரை இப்போது வெளியிட்டிருக்கிறது. வாகனப் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பல்சர் 250 மாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

டீசரில் எதிர்பார்த்ததுபோலவே பைக் மாஸாக இருக்கிறது. கருப்பு நிற கலரில் இருக்கும் பைக், முன்பக்கம் கெத்து காட்டுகிறது. பைக் ரைடிங்கில் விரும்பம் உள்ளவர்கள் இந்த பைக்கை ஒருமுறையாவது லாங் டிரைவ் சென்றுவர வேண்டும் என இப்போதே திட்டமிட்டு விடுவார்கள். அந்தளவுக்கு பைக்கின் லுக்கை, மிக கவனமாக வடிவமைத்திருக்கிறது பஜாஜ். புதியதாக பைக் வாங்க வேண்டும் என விரும்புபவர்கள், ஒருமுறை பல்சர் 250 -ன் டீசரை பார்த்தால், வேறு பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள்.



அழகாகவும், கெத்தாகவும் பைக் இருக்கிறது. டீசரிலும் அக்டோபர் 28ம் தேதி பைக் அறிமுகமாகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளனர். இந்த புதிய தலைமுறை பல்சர் நாக்டு & பகுதி மறைக்கப்பட்டது என்ற இரு வெர்சன்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. டீசரில் இடம்பெற்றிருந்து இரண்டாவது வெர்சன்.

முன்பக்கம் போலவே ஹேண்டில் பார்களும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் மாடலில் இடம்பெற்றுள்ளது. அதாவது, பல்சரில் இதற்கு முன்பு வெளியான 220 மற்றும் 220 எஃப் பைக்குகளில் இடம்பெற்ற ஹேண்டில்பார்களை போல்வே இதிலும் உள்ளது. பைக் டிசைனைப் பொறுத்தவரை செமி பேர்டு டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூமராங் போன்ற டி.ஆர்.எல்.கள், ட்வின் ஸ்ட்ரிப் எல்.இ.டி. டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் புதிய பல்சர் 250ல் இடம்பெற்றுள்ளது.

Also read... இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி - சீன நிறுவனம் திட்டம்!

புதிய பல்சர் 250 மாடலில் 36.சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும். இந்த என்ஜின் ஏர் / ஆயில் கூல்டு யூனிட் ஆகும். இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் யூனிட் மற்றும் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆகியவை பைக்கில் இடம்பெற்றிருக்கும். இப்போதைக்கு, பல்சர் 250 மாடல் வெளியீட்டில் பஜாஜ் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. அக்டோபர் 28ம் தேதி மாஸாக அறிமுகப்படுத்திய பிறகு, டோமினார் ரேஞ்ச் பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் தீபாவளிக்கு முன்பாக இந்த பைக் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், புக்கிங்கும் பாசிட்டிவ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: