நவீன வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள புதிய ரெனால்ட் க்விட்

news18
Updated: August 2, 2018, 7:19 PM IST
நவீன வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள புதிய ரெனால்ட் க்விட்
புதிய ரெனால்ட் க்விட்
news18
Updated: August 2, 2018, 7:19 PM IST
ரெனால்ட் நிறுவனம் புதிய க்விட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய மாடல் விற்கப்பட்ட அதே விலையில் இந்த புதிய காரும் விற்பனைக்கு வந்துள்ளது.மேலும் இந்த புதிய க்விட்டில் பல வசதிகளை ரெனால்ட் நிறுவனம் அள்ளி வழங்கியிருக்கிறது.

இந்த புதிய க்விட்டின் விலை 2.65 லட்சம் ரூபாயிலிருந்து 4.59 லட்ச ரூபாய் வரை உள்ளது. புதிய ரெனால்ட் க்விட் காரின் வகைகள் மற்றும் அதன் விலை பின்வருமாறு.


  • ஸ்டாண்டர்ட் - 0.8L SCe - ரூ. 266,700

  • க்விட் RXE - 0.8L SCe - ரூ. 309,800

  • க்விட் RXL - 0.8L SCe - ரூ. 335,900

  • க்விட் RXT-O (MT) - 0.8L SCe - ரூ. 382,500
  • Loading...
  • க்விட் RXT-O (MT) - 1.0 L SCe - ரூ. 404,500

  • க்விட் RXT-O- (AMT) - 1.0 L SCe - ரூ. 434, 500

  • க்விட் கிளைம்பர் MT- 1.0 L SCe - ரூ. 429,500

  • க்விட் கிளைம்பர் AMT- 1.0 L SCe - ரூ. 459,500
காம்பாக்ட் ஹாட்ச்பேக் வகை காரான இந்த புதிய ரெனால்ட் க்விட் 7 இன்ச் டச் ஸ்கிரீன் மீடியா சிஸ்டம், ரியர் கேமரா, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட், ஒன் டச் லேன் சேஞ் இண்டிகேட்டர், வேகத்துக்கு ஏற்ற மாதிரி மாறும் வால்யூம் கண்ட்ரோல் மற்றும் ப்ரோ சென்ஸ் சீட் பெல்டுகளுடன் களமிறங்கி உள்ளது.

இந்த புதிய க்விட்டின் பூட் கெப்பாசிடி 300 லிட்டர், 180 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ், 4 வருடம்/1 லட்சம் கிமீ வாரண்டி. இந்த புதிய க்விட் ஃபியரி ரெட்(சிவப்பு), பிளானட் கிரே, மூன்லைட் சில்வர், ஐஸ் கூல் ஒயிட்(வெள்ளை), அவுட்பேக் பிராண்ஸ்(வெண்கலம்) மற்றும் எலெக்ட்ரிக் புளூ(நீலம்) என 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய க்விட்டின் அனைத்து வகைகளிலும் எமெர்ஜென்சி லாக்கிங் ரிட்ராகடர் என்ற வசதி உண்டு. இந்த வசதியின் மூலம் பின் பக்க சீட் பெல்ட் இருக்கையைல் அமர்பவர்களின் அசைவுக்கு ஏற்ப தானே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனால் வேகமாக நிறுத்தப்பட்டாலோ விபத்து ஏற்பட்டாலோ தானாக லாக் செய்து கொள்ளும்.

இந்த புதிய க்விட்டில் புதிதாக ரியர் கேமரா மற்றும் டிராஃபிக் அசிஸ்ட் என்ற வசதியும் உள்ளது. இந்த வசதி டிராஃபிக்கின் போது கார் மெதுவாக முன்னகரவும், ஏற்றங்களில் நிற்கும் போது பின் நகராமல் இருப்பதற்கும் உதவுகிறது.
First published: August 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...