Hyundai Santro (AH2): நாளை அறிமுகமாகிறது ஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ 2018

news18
Updated: October 8, 2018, 7:02 PM IST
Hyundai Santro (AH2): நாளை அறிமுகமாகிறது ஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ 2018
சாண்ட்ரோ கார்
news18
Updated: October 8, 2018, 7:02 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சாண்ட்ரோ கார் நாளை அறிமுகமாகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பேரிதும் வரவேற்பை பெற்ற ஹாட்ச் பேக் காரான சாண்ட்ரோவை மீண்டும் களத்தில் இறக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவுசெய்தது. இதனையடுத்து பல நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட புதிய சாண்ட்ரோ காருக்கு புதிய பெயரை சூட்ட ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டது. சாண்ட்ரோ, ஐ-5, ஸ்பலாஷ் மற்றும் சானியோன் ஆகிய 4 பெயர்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொல்லி வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டது. இதில் சாண்ட்ரோ என்ற பெயர் 201,568 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது.

புதிய சாண்டிரோ.



இந்தப் புதிய சாண்ட்ரோ கார் நாளை அறிமுகம்செய்யப்படுகிறது. அக்டோபர் 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இதற்கு முன்பே இந்த புதிய சாண்ட்ரோ பற்றிய தகவல்கள் வெளியாகின. இப்போது இந்தக் காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

புதிய சாண்டிரோவின் இண்டிரியர்.


வெளியாகியுள்ள புகைப்படத்தில், புதிய சாண்ட்ரோ சிவப்பு வண்ணத்தில் உள்ளது. முன் பக்கத்தை பொறுத்தவரைக் கூர்மையான ஹெட்லைட்டுகள், அழகிய கிரில் உள்ளிட்டவை இருக்கின்றன. பின் பக்கம் அகலமான டெய்ல் கேட்டுடன் கூடிய சிறிய டெய்ல் லாம்புகள் உள்ளன. காரின் கேபின் மற்ற ஹூண்டாய் கார்களை போலவே உள்ளது. 7.0 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்மெண்ட் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ உள்ளிட்ட இயங்குதளத்தில் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

இணையதளங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி இந்தப் புதிய சாண்ட்ரோ 1.1 லிட்டர் எப்ஸிலான் பெட்ரோல் என்ஜினுடன் மானுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளோடு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கார் டாட்டா டியாகோ மற்றும் மாருதி சுஸுகி செல்லாரியோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...