ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நவராத்திரி முன்பதிவு சலுகை : ஹீரோ ஸ்கூட்டர்கள், பைக்குகள் அதிரடி ஆஃபர்.! 

நவராத்திரி முன்பதிவு சலுகை : ஹீரோ ஸ்கூட்டர்கள், பைக்குகள் அதிரடி ஆஃபர்.! 

ஹீரோ ஸ்கூட்டர்

ஹீரோ ஸ்கூட்டர்

Hero MotoCorp motorcycles offer | நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் டீலர்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கவும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்களின் விரும்பமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero moto corp) நிறுவனம் செப்டம்பர் 22ம் தேதி முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணவீக்கம், உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 14 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் 4 ஸ்கூட்டர்கள் மீதான விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது நவராத்திரி சிறப்பு ஆஃபரை அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியாக நவராத்திரியை முன்னிட்டு ஹீரோ பைக் அல்லது ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டு அறிவிப்பில், நவராத்திரி முன்பதிவு சலுகை செப்டம்பர் 25ம் தேதி வரை செய்யப்படும் என்றும், இந்தியாவில் நவராத்திரி கொண்டாடப்பட உள்ள செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை முன்பதிவு சலுகையின் கீழ் புக் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் புக் செய்த பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு தொகையையும் 501 ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ் : விலையை உயர்த்திய ஹீரோ நிறுவனம்!

சில ஹீரோ மோட்டோகார்ப் டீலர்கள் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அவர்களது ஏஜென்ஸி சார்பிலும் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். அதன்படி நவராத்தியை முன்னிட்டு பைக் மற்றும் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். சில டீலர்கள் 1,100 ரூபாய் கொடுத்து ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 600 ரூபாய் மதிப்புள்ள ஆக்சஸெரீஸ்களை வழங்க உள்ளனர்.

அதேபோல் சில ஹீரோ மோட்டோ கார்ப் டீலர்கள் ஆரம்ப விலையில் இருந்து 2,100 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளனர். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Maestro Edge, Destini மற்றும் Pleasure+ போன்ற ஸ்கூட்டர்களுக்கு 2,100 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 அறிமுகம்!

இந்தியாவில் ஓனர்ஷிப் செலவுகள், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஆரம்ப நிலை இருசக்கர வாகனங்களுக்கான தேவை மற்றும் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களாக இருசக்கர வாகனங்களின் விற்பனை மந்தமாகி வரும் நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை மூலம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்க பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களின் விலையை 5 முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Hero, Navaratri