’வேகமாக சென்றதால் என் காருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்’- ட்ராஃபிக் அபராதம் குறித்து நிதின் கட்கரி

'விதிமுறைகளை மீறினால் யாராக இருந்தாலும் கடுமையான அபராதங்கள் கண்டிப்பாக விதிக்கப்படும்'.

Web Desk | news18
Updated: September 9, 2019, 6:34 PM IST
’வேகமாக சென்றதால் என் காருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்’- ட்ராஃபிக் அபராதம் குறித்து நிதின் கட்கரி
நிதின் கட்காரி
Web Desk | news18
Updated: September 9, 2019, 6:34 PM IST
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் தானும் கடுமையான அபராதம் செலுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோருக்குக் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிகப்படியான அபராதங்களை அரசு விதிப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விதிமுறைகளை மீறினால் யாராக இருந்தாலும் கடுமையான அபராதங்கள் கண்டிப்பாக விதிக்கப்படும். மும்பையில் எனது பெயரில் உள்ள காருக்கு அதிவேகம் காரணமாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய சூழலில் 30% வாகன ஓட்டுநர் உரிமம் போலியானவை. கடுமையான அபராதங்கள் மூலம் ஊழல் அதிகரிக்கும் என்கிறார்கள். அப்படி ஒன்றும் நடக்காது. விதிமுறைகளை அமல்படுத்த இந்த முறைகள் உதவும். சாலை வசதிகளையும் கண்டிப்பாக மேம்படுத்துவோம்” என்றார்.

மேலும் பார்க்க: ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை முறியடித்த கியா செல்டாஸ்..!

இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா

Loading...

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...