மும்பையில் இருந்து வெறும் 1 மணி நேரத்தில் லண்டன் செல்லலாம்; வருகிறது ஹைபர்சோனிக் விமானம்!

ஒரு மணி நேரத்தில் 38,800 மைல்கள் பயணம் செய்யக்கூடிய இந்த ஹைப்பர் சோனிக் விமானமானது பயன்பாட்டிற்கு வார இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்

மும்பையில் இருந்து வெறும் 1 மணி நேரத்தில் லண்டன் செல்லலாம்; வருகிறது ஹைபர்சோனிக் விமானம்!
ஹைப்பர் சோனிக் விமானம்
  • News18
  • Last Updated: May 4, 2019, 4:38 PM IST
  • Share this:
நீங்கள் எப்போதாவது லண்டன் சென்றுள்ளார்களா? சரி, விடுங்க. மும்பையிலிருந்து லண்டன் செல்லக் குறைந்தது 8 முதல் 11 மணி நேரம் வரை தேவைப்படும்.

இதே பயண நேரம் 1 மணி நேரத்தில் நடந்தால் எப்படி இருக்கும். இது செயல்படுத்தும் திட்டத்தில் ரியாக்‌ஷன் இஞ்சினியர் லிமிடெட் என்று நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரியாக்‌ஷன் இஞ்சினியர் லிமிடெட் நிறுவனம் ஹைப்பர் சோனிக் விமானம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. இந்தத் திட்டம் வெற்றிகமராக முடியும்போது மும்பை - லண்டன் செல்வது ஒரு மணி நேரத்தில் சாத்தியம் ஆகும் என்றும் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த விமானம் வந்தால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வது, இங்கிலாந்து செல்வது போன்றவை எல்லாம் நேரடி பயணமாக நடைபெறும் என்பதால் விமான பயணிகள் இதற்காகக் காத்திருக்கின்றனர்.

ஆனால், ஒரு மணி நேரத்தில் 38,800 மைல்கள் பயணம் செய்யக்கூடிய இந்த ஹைப்பர் சோனிக் விமானமானது பயன்பாட்டிற்கு வார இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

எப்படியிருந்தாலும், இந்த விமானம் பயன்பாட்டிற்கு வந்தால் கண்டிப்பாகப் பயண நேரம் குறைந்தால் மகிழ்ச்சியே...!மேலும் பார்க்க:
First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்