சர்வதேச மோட்டார்பைக் சாகச நிகழ்வு - தயாராகும் மும்பை

சர்வதேச அளவிலான பைக் சாகச வீரர்கள் பங்குபெறும் FMX நிகழ்வு மோட்டார்பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Web Desk | news18
Updated: December 24, 2018, 12:37 PM IST
சர்வதேச மோட்டார்பைக் சாகச நிகழ்வு - தயாராகும் மும்பை
சர்வதேச அளவிலான பைக் சாகச வீரர்கள் பங்குபெறும் FMX நிகழ்வு மோட்டார்பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
Web Desk | news18
Updated: December 24, 2018, 12:37 PM IST
மோட்டார்பைக் சாகசப் போட்டியான FMX நிகழ்வு 2019-ம் ஆண்டு மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்மிக்க பல பைக் சாகச வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

FMX Showcase என்னும் ஃப்ரீஸ்டைல் மோட்டார் க்ராஸ் சாகச நிகழ்வு முதன்முதலாக 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முக்கியமான இடங்களில் எல்லாம் இந்த சாகச நிகழ்வு நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மும்பையில் FMX ஷோ நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பிரபலமான உலக சாம்பியன் Red Bull X வீரர்கள், பிரான்ஸைச் சேர்ந்த டாம் பேஜஸ், ரஷ்யாவில் முதன் முதலாக back flip சாகசம் நிகழ்த்திய அலெக்ஸி கோலெஸ் நிகோவ் ஆகியோர் பங்குபெற உள்ளனர். கூடுதலாக சர்வதேச வீரர்களான மார்டின் கொரென், ரடேக் பிலேக், ஜூலியன் வேன்ஸ்டிப்பேன் ஆகியோரும் மும்பையில் பைக் ஸ்டன்ட்டில் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகின்றனர்.

இதுகுறித்து அலெக்ஸி கோலெஸ் நிகோவ் கூறுகையில், “FMX ஷோ போன்ற மிகப்பெரும் நிகழ்வுகள் என்னைப் போன்ற வீரர்களுக்கு சாகச திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் மிகப்பெரும் தளம். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக என்னுடைய சாகசமும் இடம்பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. மோட்டார் சாகசங்கள் மீது இந்தியர்கள் கொண்ட ஆர்வமும் பிரியமும் குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். இந்திய மக்கள் மத்தியில் சாகசம் செய்ய ஆர்வமாய் இருக்கிறேன்” என்றார்.

தேசிய அளவிலான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது சர்வதேச நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தி மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறையை மேம்படுத்த மஹாராஷ்டிரா அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் பார்க்க: விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவேன்... 6 வயது சிறுவன் சபதம்
First published: December 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...