உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கே லாயக்கற்ற நகரங்களின் பட்டியல்... இந்திய நகரத்துக்கு முதலிடம்..!

வாகனங்களை இயக்க மிகவும் வசதியான சொகுசான நகரங்களின் பட்டியலில் கனடா நாட்டின் கல்காரி நகரம் முதலிடத்தில் உள்ளது.

உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கே லாயக்கற்ற நகரங்களின் பட்டியல்... இந்திய நகரத்துக்கு முதலிடம்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 16, 2019, 4:31 PM IST
  • Share this:
உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கு லாயக்கற்ற நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மேடு பள்ளமான சாலைகள், அநாவசிய வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், வாகன நெரிசல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஐரோப்பிய கார் பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாகனம் ஓட்ட லாயக்கற்ற நகரங்களில் சர்வதேச அளவில் மும்பை முதலிடத்திலும் பாகிஸ்தானின் கராச்சி 2-ம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது. இதேபோல், வாகனங்களை இயக்க மிகவும் வசதியான சொகுசான நகரங்களின் பட்டியலில் கனடா நாட்டின் கல்காரி நகரம் முதலிடத்தில் உள்ளது.


இரண்டாம் இடத்தில் துபாய் நகரமும் மூன்றாம் இடத்தில் கனடாவின் ஒட்டாவா நகரமும் உள்ளது. மொத்தம் 15 அம்சங்களைக் கணக்கில் வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிபொருள் செலவு, சாலை வர், அரசு செய்யும் மேம்பாடுகள் ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: 2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ள வோக்ஸ்வேகன்..!
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading