ஏசி பஸ் பயணத்துக்கு வெறும் 6 ரூபாய் டிக்கெட்... அசத்தும் மாநகர போக்குவரத்துத் துறை!

காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி பஸ் பயணத்துக்கு வெறும் 6 ரூபாய் டிக்கெட்... அசத்தும் மாநகர போக்குவரத்துத் துறை!
(Image: Rajesh Saple/News18)
  • News18
  • Last Updated: March 14, 2020, 2:07 PM IST
  • Share this:
மாநகரப் பயணங்களுக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் இனி ஏசி பஸ்களில் வெறும் 6 ரூபாய் டிக்கெட் செலுத்திப் பயணிக்கலாம் என மும்பை மாநகர போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மும்பை விமான நிலையத்திலிருந்து அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குச் செல்ல ஏசி பஸ்களில் வெறும் 6 ரூபாய் டிக்கெட் செலுத்திப் பயணிகள் பயணிக்கலாம். இந்த ஹோலி பண்டிகை முதல் இந்த ஆஃபர் ஏசி பஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விமானம் நிலையம் முதல் அந்தேரி வரையில் இரண்டு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் கட்டண உயர்வு அதிகம் உள்ளது என்றும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்றும் மக்கள் அளித்தத் தொடர் புகார்களின் காரணமாக இந்த சலுகை ஏசி பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
மேலும் பார்க்க: கொரோனா தாக்கம்: ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுத்தம் செய்யப்படும் இண்டிகோ விமானம்!
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading