வாகன ஒலி மாசுவைக் குறைக்க மஹிந்திராவுக்கு ‘ஐடியா’ கொடுத்த 11 வயது சிறுமி!

தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது தேவையில்லாத விரயத்தையும் ஒலி மாசுவையும் ஏற்படுத்தும்.

Web Desk | news18
Updated: April 5, 2019, 4:37 PM IST
வாகன ஒலி மாசுவைக் குறைக்க மஹிந்திராவுக்கு ‘ஐடியா’ கொடுத்த 11 வயது சிறுமி!
ஆனந்த் மஹிந்திரா (Image: Reuters)
Web Desk | news18
Updated: April 5, 2019, 4:37 PM IST
வாகனங்கள் அதிக சத்தமான ஹாரன் வைத்திருப்பது ஒலி மாசுவை ஏற்படுத்தும் என்று அதைக் குறைக்க ஒரு ‘ஐடியா’ தருவதாகவும் 11 வயது சிறுமி ஒருவர் மஹிந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மஹிந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுமி மஹிகா மிஷ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு வாகன ஹாரன் சத்தம் எழுப்பும் ஒலி மாசுவைக் குறைக்கக் கொடுத்த யோசனை பிடித்துப்போனதால் அந்தக் கடித யோசனையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

கடிதத்தில் சிறுமி மஹிகா, “நான் வாகனங்களில் பயணம் செய்யும் போதெல்லாம் பலர் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பதை பார்க்கிறேன். குறிப்பாக வாகன நெரிசல் சூழலில் இதுபோல் செய்கிறார்கள். ஹாரன் அடித்தால் வாகனங்கள் நகராது என அவர்களுக்குப் புரிவதில்லை.

தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது தேவையில்லாத விரயத்தையும் ஒலி மாசுவையும் ஏற்படுத்தும். இதனால் உங்கள் நிறுவன வாகனங்களில் ஹாரன் அமைக்கும் போது இந்த யோசனையைப் பயன்படுத்துங்கள்.

10 நிமிடங்களுக்கு 5 முறை மட்டுமே ஹாரன் அடிக்க முடியும் என்பது போல் வடிவமைக்கலாம். ஒரு முறை ஹாரன் அடித்தால் அது 3 விநாடிகள் மட்டுமே ஒலி எழுப்பும் வகையிலும் வடிவமைக்கலாம். இதன் மூலம் வாகன ஒலி மாசு குறையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.சிறுமியின் இக்கடிதத்தை வியந்து பாராட்டியுள்ளார் ஆனந்த் மஹிந்திரா. மேலும் அவர், “மிகவும் சோர்வான ஒரு நாளில் இதுபோன்ற கடிதம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. நல்ல, அமைதியான உலகத்தை விரும்பும் இவளைப் போன்ற மக்களுக்காகத் தான் நான் உழைப்பதாக நினைக்கிறேன்” எனப் பாராட்டியுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.மேலும் பார்க்க: வாக்களிப்பதால் குஷ்டம் தான் வரும் - சீமான் பேச்சால் மக்கள் அதிர்ச்சி
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...