Home /News /automobile /

கழிவு-சார் மின்சாரத்தை கொண்டு அமையும் முதலாவது சார்ஜிங் நிலையம் - எங்கு உள்ளது தெரியுமா?

கழிவு-சார் மின்சாரத்தை கொண்டு அமையும் முதலாவது சார்ஜிங் நிலையம் - எங்கு உள்ளது தெரியுமா?

கழிவு-சார் மின்சாரத்தை கொண்டு அமையும் முதலாவது சார்ஜிங் நிலையம்

கழிவு-சார் மின்சாரத்தை கொண்டு அமையும் முதலாவது சார்ஜிங் நிலையம்

எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    எரிபொருள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால், பசுமை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. இந்த வாகனங்களின் வசதி கருதி சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, பூனே, சூரத் போன்ற நகரங்களில் பொது பயன்பாட்டு சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகளில் இருந்து எடுக்கப்படும் பயோ-கேஸ் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு மும்பையில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை உற்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது சார்ஜிங் நிலையம் இதுவாகும்.

    ஆர்கானிக் கழிவுகள் மூலமான சார்ஜிங் நிலையத்தை மகாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திறந்து வைத்தார். இந்த சார்ஜிங் நிலையத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த விஷயம் என்ன என்றால், அருகாமையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் சேகரமாகும் ஆர்கானிக் கழிவுகளில் இருந்தே பெரும்பகுதி மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் 220 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : கார் வாங்கும் பிளான் இருக்கா..? டாடா மோட்டர்ஸ் வழங்கும் அசத்தல் ஆஃபர்

    பயோ-கேஸ் மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தெருவிளக்குகளுக்கான மின் சப்ளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை பெருநகர மாநகராட்சி மற்றும் ஏரோ கிளீன் எனர்ஜி நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

    ஏற்கனவே உள்ள உற்பத்தி நிலையமும் இணைக்கப்படுகிறது

    மும்பையின் ஜோகேஸ்வரி கிழக்குப் பகுதியில், மடோஸ்ரீ மினதாய் தாக்கரே பூங்கா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவப்பட்ட பயோ-கேஸ் மின் உற்பத்தி ஆலை, சிறிய அளவில் மின்சார உற்பத்தியை செய்து வருகிறது. இதுவரையிலும் இங்கு 1.5 லட்சம் டன் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலையையும் தற்போதைய சார்ஜிங் நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தினசரி 4 கார்களுக்கு இப்போது சார்ஜிங்

    பயோ-கேஸ் மின்சார சார்ஜிங் நிலையம் குறித்து ஏரோகேர் கிளீன் எனர்ஜி நிறுவனத்தின் அன்கித் ஸாவேரி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘தற்போதைய சூழலில், என்கள் சார்ஜிங் நிலையத்திற்கு தினசரி 3 முதல் 4 கார்கள் வருகின்றன.

    சார்ஜிங் நிலையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவும், மாநகரில் கழிவு-சார் மின் உற்பத்தி நிலையங்களை கூடுதலாக திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

    கழிவு மேலாண்மை

    மும்பை பெருநகர மாநகராட்சியில் தினசரி 6,000 மெட்ரிக் டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில், 70 சதவீத கழிவுகள் ஈரத்தன்மை கொண்டவை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மும்பை பெருநகர மாநகராட்சியில் உள்ள 24 நிர்வாக வார்டுகளில் தலா ஒன்று என்ற அளவில் கழிவு-சார் மின்சார சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile

    அடுத்த செய்தி